மஜா பா மஜா.. சம்பளத்துடன் 53 நாட்கள் லீவு.. தொழிலாளர்களுக்கு சலுகைகளை அள்ளி தரும் நாடுகள் இவைகள்தான்
சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8லிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் வகையில் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கான சரியான உரிமைகளை வழங்கும் நாடுகள் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது.
உலகில் உள்ள அனைவருக்கும் 8 மணி நேரம்தான் (வாரத்திற்கு 48 மணி நேரம்) வேலை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் 9-10 மணி நேரம் வரை தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். இதற்கான எந்த எக்ஸ்ட்ரா சம்பளமும் வழங்கப்படுவதில்லை. இப்படியான சூழலில்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (ஏப்.21) மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவின்படி விருப்பப்படும் நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஒப்புதலோடு வேலை நேரத்தை 8லிருந்து 12 மணி நேரமாக நீடித்து கொள்ளலாம். ஆக வாரம் 4 (12*4=48) நாட்கள் வேலை 3 நாட்கள் விடுப்பு. இந்த 12 மணி நேர வேலைக்கு ஏற்ப சம்பளம் உண்டு என்று சொல்லப்படுகிறது. சரி எல்லாம் ஓகே மாதிரிதானே இருக்கு என்று நமக்கு தோணலாம். இங்குதான் டிவிஸ்டே இருக்கிறது. அதாவது 4 நாட்கள் வேலை என்பது பெயரளவுக்கு மட்டுமே இருக்கும்.
நேரம் கிடைக்குமா?: மீதமுள்ள 3 நாட்களில் ஹாயாக எங்காவது போகலாம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான், வேலை இருக்கிறது என்று ஓனர் கூப்பிடுவார். எந்த தொழிலாளியாலும் அதை மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அடுத்த நொடியே அவரை வேலையிலிருந்து ஓனர் நீக்கிவிடலாம். இந்த அச்சம் தொழிலாளியை கேள்வி கேட்காமல் வேலை செய்ய வைக்கும். அதேபோல 12 மணி நேரம் வேலை என்பது குடும்பத்தை பற்றியோ, நண்பர்கள், பொழுதுபோக்கு பற்றியோ சிந்திக்க நேரத்தை கொடுக்காது.
ஆபத்து என்ன?: எனவே சமூகத்தில் இந்த மசோதா பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்தியாவில் சராசரியாக அனைத்து தனியார் ஊழயர்களும் 9 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். சட்டம் 8 மணி நேரம் என்றுதான் சொல்கிறது. அப்படி இருக்கும்போதே 9-10 மணி நேரம் வேலை வாங்கப்படும் தொழிலாளர் தற்போது 12 மணி நேரம் கட்டாய வேலை என்று சட்டம் போட்டால் 14 மணி நேரம் அவர்கள் சுரண்டப்படும் அபாயம் இருக்கிறது. தொழிலாளர் இதற்கு ஒத்துழைக்க மறுத்தால் வேலையிலிருந்து துரத்தப்படுவார்கள்.
சலுகையா? உரிமையா?: ஆனால் இந்த தொழிலாளர்கள் நல சட்டங்களை சரியாக பின்பற்றும் நாடுகளும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நாடுகளில் வழங்கப்படும் உரிமைகள் இந்தியாவிலிருந்து பார்த்தால் 'சலுகைகள்' போல தெரியும். அப்படிப்பட்ட சில நாடுகள் குறித்த தகவல்கள்தான் தற்போது வேகமாக பரவி வருகிறது.
நார்வே: இந்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நார்வே. இங்கு தொழிலாளர் நல சட்டங்கள் வலுவாக இருக்கின்றன. நாட்டின் அனைத்து நிறுவனங்களிலும் தொழிற் சங்கம் அமைப்பதற்கான உரிமை இருக்கிறது. (இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க உரிமை இருந்தாலும் அதை நிறுவனங்கள் அமைக்க விடுவதில்லை என்பது தனி கதை) நார்வே நாட்டில் உள்ள தொழிற் சங்கங்கள் கம்பெனி முதலாளிகளுடன் சம்பளம் குறித்து பேரம் பேசும். முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை கண்மூடிக்கொண்டு தொழிலாளர்கள் பெற்றுச்செல்ல மாட்டார்கள். அதற்கு மாறாக தொழிலாளர்கள்தான் சம்பளத்தை நிர்ணயிப்பார்கள்.
ஸ்வீடன்: இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஸ்வீடன். இங்கும் வலுவான தொழிலாளர்கள் நல சட்டங்கள் இருக்கின்றன. நினைத்த நேரத்தில் எல்லாம் ஒருவரை எளிதாக வேலையிலிருந்து தூக்கிவிட முடியாது.
ஜெர்மனி: அதேபோல ஜெர்மனியிலும் தொழிலாளர் நலச்சட்டங்கள் ஷார்ப்பாக இருக்கும். இந்த நாட்டில் தொழிலாளர்களும்-முதலாளிகளும் கலந்து பேசிதான் எந்த முக்கிய முடிவாக இருந்தாலும் அதை எடுப்பார்கள். இதற்கு பெயர்தான் இணை-நிர்ணய முறை (co-determination). இந்த இணை-நிர்ணய முறைக்கு உலக அளவில் பெயர்போனதுதான் ஜெர்மனி.
கனடா: இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாடு கனடா. கனடா ஒரு வளர்ந்த நன்கு முதிர்ச்சியடைந்த தொழிலாளர் நல சட்டங்களை கொண்டிருக்கிறது. இதன் விளைவாக உருவானவைதான் தீர்ப்பாயங்கள். தொழிலாளர்களுக்கும்-முதலாளிகளுக்கும் இடையே உள்ள சர்ச்சரவுகளை இந்த தீர்ப்பாயங்கள் தீர்த்து வைக்கும்.
நியூசிலாந்து&ஆஸ்திரேலியா: இதற்கடுத்து உள்ள நாடுகள் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும்தான். இந்த நாடுகளில் தொழிலாளர் சட்டங்கள் வலுவாக இருப்பதுடன், உரிய விடுமுறைகளும் வழங்கப்படுகின்றன. பணியிட சுகாதாரம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை இந்த நாடுகளில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
விடுமுறை: இதெல்லாம் சம்பளம் குறித்த தகவல்கள். மறுபுறம் விடுமுறை என்பது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாமெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது விடுமுறை எடுத்திருந்தோம். ஆனால் வேலை என்று வந்துவிட்ட பிறகு லீவு என்கிற சொல்லே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இப்படியாக உலகம் முழுவதும் எந்ததெந்த நாடுகளில் அதிக விடுமுறைகள் வழங்கப்படுகிறது என்கிற பட்டியல் சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி,
- ஈரான் -53
- சான் மரினோ -46
- ஏமன் -45
- அந்தோரா -44
- பூட்டான் -44
- பஹ்ரைன் -44
- டோகோ -43
- நைஜர் -43
- மடகாஸ்கர் -43
- மொனாகோ -42
- குவைத் -42
- அஜர்பைஜன் -42
- மாலி -42
- பெரு -42
- ரஷ்யா -42
- மாலதீவுகள் -41
- ஜார்ஜியா -41
- பனாமா -41
- ஆகிய நாடுகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் சம்பளத்துடன் குறைவான விடுப்பு வழங்கும் நாடுகளும் அதிகமாகவே இருக்கின்றன.
- மைக்ரோனேசியா -9
- நரூரு -10
- அமெரிக்கா -10
- மெக்சிகோ -14
- சீனா -16
- லெபனான் -17
- பிலிப்பைன்ஸ் -17
- நைஜீரியா -17
- தைவான் -17
- சிங்கப்பூர் -18
- துனியா -18
- இந்தியா -18
- மலேசியா -19
- கனடா -19
- தாய்லாந்து -19
- பஹமாஸ் -20
போன்ற நாடுகளில் மிகக் குறைவான அளவில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.
-
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications