ஸ்டாலின், உதயநிதி, திருமுகன் ஈவெரா, மனோஜ் பாண்டியன்.. சட்டசபையை அலங்கரிக்கும் வாரிசுகள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வாரிசுகளில் யார் யார் வெற்றி அடைந்தார்கள் என்பதை பார்ப்போம்.
எந்த கட்சியாக இருந்தாலும் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். இது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், திரிணமூல் என அனைவருக்கும் பொருந்தும்.
அந்த வகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் 22 வாரிசுகள் போட்டியிட்டுள்ளனர். அது போல் காங்கிரஸ் சார்பில் 4 வாரிசுகள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் வென்றார்கள் என்பதை பார்ப்போம்.

ஸ்டாலின்
முதலில் திமுகவை பார்ப்போம். திமுகவில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தலைவர் ஸ்டாலின். இவர் கருணாநிதியின் மகன். அது போல் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஸ்டாலினின் மகன் ஆவார்.

வில்லிவாக்கம்
பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஐ.பி. செந்தில்குமார். இவர் ஐ பெரியசாமியின் மகன். திருவறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மகேஷ் பொய்யாமொழி. இவர் பொய்யாமொழியின் மகன் ஆவார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் வெற்றியழகன். இவர் மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் பேரானாவார்.

திமுக எம்பி
அது போல் தூத்துக்குடியில் போட்டியிட்டு வென்றவர் கீதா ஜீவன். இவர் பெரியசாமியின் மகளாவார். திருச்சுழியில் போட்டியிட்டு வென்றவர் தங்கம் தென்னரசு. இவர் தங்க பாண்டியனின் மகனாவார். திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் ஆவார்.

கொரோனா
மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் டிஆர்பி ராஜா. இவர் திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனாவார். மதுரை மத்தியில் போட்டியிட்டு வென்றவர் பிடிஆர்பி ராஜன். இவர் பிடிஆர் பழனிவேல் ராஜாவின் மகனாவார். திநகரில் போட்டியிட்டு வென்றார் ஜெ கருணாநிதி. இவர் கொரோனாவால் மறைந்த ஜெ அன்பழகனின் மகனாவார்.

ஜெயங்கொண்டம்
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கே பி பி சங்கர். இவர் கே பி பி சாமியின் தம்பி. குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிவசங்கர் , சிவசுப்பிரமணியத்தின் மகனாவார். ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கா.சொ. கண்ணன். இவர் கா.சொ. கண்ணனின் மகனாவார்.

திட்ட கமிஷன்
கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பிஎஸ்டி சரவணன். இவர் திருவேங்கிடத்தின் மகனாவார். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் எழிலன். இவர் மாநில திட்டகமிஷனின் முன்னாள் துணை தலைவர் நாகநாதனின் மகனாவார்.

திருவாரூர்
நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் சபா ராஜேந்திரன். இவர் சபாபதியின் மகனாவார். திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் பூண்டி கலைவாணன். இவரத் பூண்டி கலைச்செல்வனின் தம்பியாவார். காஞ்சிபுரத்தில் எழிலரசன் போட்டியிட்டு வென்றார். இவர் காஞ்சி அண்ணாமலையின் பேரனாவார். ராமநாதபுரத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் காதர் பாஷா முத்து ராமலிங்கம். இவர் முன்னாள் எம்எல்ஏ காதர் பாஷாவின் மகனாவார்.

இளங்கோவன்
திமுகவில் போட்டியிட்ட 22 வாரிசுகளில் 19 பேர் வென்றுள்ளார்கள். அது போல் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் திருமுகன் ஈவெரா. இவர் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனாவார். அது போல் அறந்தாங்கியில் போட்டியிட்டு வென்றவர் தி. ராமச்சந்திரன். இவர் திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசரின் மகனாவார்.

ஆலங்குளம்
அது போல் திருவாடாணை தொகுதியில் கரு மாணிக்கம் வென்றார். இவர் காங்கிரஸின் கே ஆர் ராமசாமியின் மகன். கன்னியாகுமரி எம்பி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் விஜய் வசந்த். இவர் மறைந்த எம்பி எச் வசந்தகுமாரின் மகனாவார். அதிமுக சார்பில் ஆலங்குளம் சார்பில் போட்டியிட்டு வென்றவர் மனோஜ் பாண்டியன். இவர் பி எச் பாண்டியனின் மகனாவார்.












Click it and Unblock the Notifications