Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பேருக்கு 3.. 3 பேருக்கு 2.. ஆக மொத்தம் 5.. அதிர வைத்த சுயேச்சை வேட்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கிய சுயேச்சைகள் குறித்து பார்ப்போம். அதிலும் மூன்று பேர் தலா இரு வாக்குகளையும் இரண்டு பேர் தலா மூன்று வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் வலிமையான கட்சிகளுடன் தான் வெற்றி பெறும் அளவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்தே சில சுயேச்சைகள் டெபாசிட் தொகையை செலுத்தி பல தடை சுயேச்சையாகவே போட்டியிடுவார்கள்.

இதில் வலிமையான கட்சி வேட்பாளரின் அதே பெயர், இனிஷியல் கொண்டவர்களும் இருப்பதால் ஏதோ கணிசமான வாக்குகளை பெறுவர். மற்றபடி சின்னத்தை வைத்து பெரும்பாலானோர் வாக்களிப்பதால் வெற்றி பெறும் அளவிற்கான வாக்குகள் கிடைப்பது மிகவும் அரிதே.

கட்சி

கட்சி


வேண்டுமானால் ஏதோ ஒரு பெரிய கட்சியில் பல முறை போட்டியிட்டு எம்எல்ஏ பதவி வகித்து பின்னர் அந்த கட்சியில் சீட்டு தர மறுக்கும் போது இது போல் யாராவது சுயேச்சையாக போட்டியிட்டால் அவர் அந்த தொகுதி செய்த நன்மைகளை கருத்தில் கொண்டு மக்கள் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவிடுவார்கள்.

ஒற்றை இலக்கம்

ஒற்றை இலக்கம்

மற்றபடி இது போல் சுயேச்சையாக நிற்பவர்களுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும்தான் வாக்களிப்பர். இன்னும் சொல்ல போனால் ஒரு சில வேட்பாளர்களுக்கு கட்டிய மனைவியே கூட வாக்களிக்காமல் மாற்று கட்சிக்கு வாக்களித்த கூத்தெல்லாம் நடந்துள்ளது. அது போல் இந்த தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என பார்ப்போம்.

இரு வாக்குகள்

இரு வாக்குகள்

கரூர் தொகுதியில் 77 பேர் களம் கண்டனர். அதில் 19 பேர் ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள். இதில் சுயேச்சைகள் சக்திகுமார், செந்தில், மணிகண்டன் ஆகிய மூன்று தலா இரு வாக்குகளை வாங்கியுள்ளனர். அது போல் புஷ்பராஜ், மணிவண்ணன் ஆகிய இருவர் தலா 3 வாக்குகள் வாங்கியுள்ளனர்.

எத்தனை வாக்குகள்

எத்தனை வாக்குகள்

இந்த வாக்குகள் யாருடையது என்பதை வேட்பாளர்கள் எளிதாக கண்டுபிடித்துள்ளார்களாம். இரு ஓட்டு வாங்கியவர்களில் ஒன்று வேட்பாளருடையது மற்றொன்று மனைவியுடையது, 3 வோட்டு வாங்கியவர்களில் வேட்பாளர், மனைவி, தாய் அல்லது தந்தை அல்லது மகள், மகன் ஆகியோருடையதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+