3 ஆண்டு சிறை தண்டனை.. பதவியை இழந்த பொன்முடி.. இதுவரை வழக்குகளால் பதவியை பறிகொடுத்தவர்கள் யார் யார்?
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர், எம்.எல்.ஏ பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி. இதுவரை ஊழல் வழக்குகளால் பதவி இழந்தவர்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் திர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பைச் சந்திக்கும் மூன்றாவது எம்..எல்.ஏ.வாக பொன்முடி பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், கலவர வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் தங்கள் பதவியை இழந்தனர்.
3 ஆண்டு ஜெயில்- பொன்முடி அரசியல் வாழ்வு 'சூனியமானது'-2002 முதல் இன்று வரை நடந்தது என்ன? முழு விவரம்!
இதுவரை பதவி இழந்தவர்கள் லிஸ்ட்:
தமிழ்நாட்டில் ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனையும் பெற்றதுடன், தங்களது பதவியையும் இழந்தனர். இந்தியாவில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றதுடன் தனது எம்.பி பதவியை இழந்தார். 1990ல் பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத்துக்கு, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 2013ஆம் ஆண்டு அவருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் அப்போது வகித்து வந்த எம்.பி பதவியை இழந்தார்.
1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு கால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததுடன், முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது. இதன்மூலம், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற முதல் முதல்வர் என்ற பெயரை பெற்றார்.
1991-1996 அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. இவர் மீது, சுடுகாட்டு கூரை அமைக்கும் பணியில் ஊழல் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து, விசாரணையைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால், தனது எம்.பி பதவியை இழந்தார் செல்வகணபதி. மேலும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே, சிறைத் தண்டனையை எதிர்த்து செல்வகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு - கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications