சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால்... இன்று முதல் புதிய விதி அமல்.. எந்த விதிமீறலுக்கு எவ்வளவு அபராதம்?
சென்னை: போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் புதிய விதி இன்று முதல் அமலாகியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் விடுத்த எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட காலத்தில் வாகனம் ஓட்டினால் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 1000 முதல் ரூ 5 ஆயிரம் வரை விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் 3 மாதம் ரத்து செய்யப்படும். சிறை தண்டனையும் 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை கிடைக்கும்.

அது போல் அவசர ஊர்திகளுக்கு வழி கொடுக்காவிட்டால் அபராதம் ரூ 10000 விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் 3 மாதம் ரத்து செய்யப்படும். சிறை தண்டனையும் 6 மாதம் வரை கிடைக்கும். சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால் அபராதமாக ரூ 20 ஆயிரம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் 3 மாதம் ரத்து செய்யப்படும்.

சரக்கு வாகனத்தை சோதனைக்கு நிறுத்தாமல் சென்றால் ரூ 40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். சிகப்பு விளக்கு சிக்னலை மதிக்காமல் போனால் ரூ 5000 அபராதம் விதித்து ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். சிறுவர், சிறுமியர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 25 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் பதிவு செய்யாமல் பயன்படுத்தினால் அபராதம் ஆண்டு வரியில் 5 மடங்கு அல்லது ஆயுட்கால வரியில் 1/3 மடங்கு விதிக்கப்படும். பெர்மிட் இல்லாத வாகனம் ஓட்டுதலுக்கு ரூ 10 ஆயிரம் அபராதமும் சிறை தண்டனை 12 மாதம் விதிக்கப்படும். காற்று மற்றும் ஒலி மாசுபாடு செய்தால் அபராதம் ரூ 10 ஆயிரம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் 3 மாதம் ரத்து செய்யப்படும். சிறை தண்டனை 6-24 மாதங்கள் விதிக்கப்படும்.

அதிகாரிகள் உத்தரவை மீறினால் ரூ 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். அதிக நபர்கள் பயணம் செய்தால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் 3 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும். மித வேகம், மிக நன்று, இலகு ரக வாகனத்தை வேகமாக இயக்கினால் ரூ 1000 முதல் ரூ 2000 வரையும் கனரக வாகனங்களுக்கு ரூ 2000 அபராதமும் விதிக்கப்படும். அத்துடன் ஓட்டுநர் உரிமமும் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ 5000 அபராதம் விதிக்கப்படும். சிறை தண்டனை 3 மாதம் வரை உண்டு. ரேஸில் ஈடுபட்டால் ரூ 500 முதல் ரூ 10,000 வரை அபராதமும் ஓட்டுநர் உரிமம் 3 மாதம் ரத்து செய்யப்படும், சிறை தண்டனை 12 மாதங்களுக்கு கிடைக்கும். ஓட்டுநர் ஒழுங்குமுறை விதிகளை மீறினால் அபராதமாக ரூபாய் ஆயிரம் விதிக்கப்படும்.

செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ 1000 முதல் ரூ 5000 வரையும் அல்லது சிறை தண்டனை 6 மாத காலத்திலிருந்து 12 மாத காலம் வரையும் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தொடர்ந்து இதே குற்றத்தை செய்தால் அபராதம் 10 ஆயிரம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமமும் 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

முந்தக் கூடாத இடங்களில் முந்தினால் ரூ 5 ஆயிரம் விதிக்கப்படும். சிறை தண்டனை 6 மாதம் கிடைக்கும். இருவரும் தலைக் கவசம் அணிந்தால் தலைக் காயம் மற்றும் உயிரிழப்பை தடுக்கலாம். அபராதம் ரூ 1000 தவிர்க்கலாம். ஓட்டுநர் உரிமம் 3 மாத காலம் ரத்து ஆவதை தடுக்கலாம்.












-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications