அவ்வளவு தானா? நிலவில் சந்திரயான் -3யின் விக்ரம் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா? வெளியான ஷாக் தகவல்
சென்னை: நிலவின் தென்துருவத்தில் உள்ள சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ முயன்று வரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சீனா, அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மாறாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றுள்ளது.

இதற்கு இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் தான் காரணம். நிலவின் தென்துருவ ஆய்வுக்காக இந்த விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரின் இதயப்பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் இறங்கியது. அதோடு நிலவின் மேற்பரப்பில் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோவை பதித்தது. பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தொலைவு வரை நிலவில் பயணித்து ஆக்சிஜன் உள்பட 8 தனிமங்கள் இருப்பதை கண்டுபிடித்தது.
அதன்பிறகு நிலவில் இரவு பொழுது தொடங்கியதால் விக்ரம் லேண்டர், ரோவரில் இருந்த டேட்டாக்களை முழுவதுமாக இஸ்ரோ பெற்றது. இதன்மூலம் சந்திரயான் 3 திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றது. அதன்பிறகு லேண்டர், ரோவர் ஆகியவை தூக்க நிலைக்கு கொண்டு சென்றது. அதாவது இரவில் சூரிய ஒளி கிடைக்காதது மற்றும் அதிக குளிரால் அந்த கருவிகள் இயங்காமல் போகலாம் என்பதால் இந்த நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது. மேலும் இரவு பொழுது முடிந்து மீண்டும் நிலவில் பகல் பொழுது தொடங்கும்போது லேண்டர், ரோவரை இயக்க முயற்சிக்கலாம் என இஸ்ரோ அறிவித்தது.
தற்போதைய சூழலில் நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் உள்ள இடத்தில் கடந்த 22ம் தேதி சூரியஒளி பட்டது. தற்போது 5 நாட்களாக அங்கு பகல் நேரமாக உள்ளது. ஆனால் இன்று வரை விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவை கண்விழிக்கவில்லை. லேண்டர், ரோவரிடம் இருந்து இஸ்ரோவுக்கு சிக்னல் வரவில்லை. இந்த சிக்னலை பெறுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை மீண்டும் செயல்பாட்டு வருவதற்கான வாய்ப்பு என்பது மிகமிக குறைவு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நிலவில் நீடித்த கடும் குளிரால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள கருவிகள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதை இஸ்ரோ முன்கூட்டியே அறிந்து இருந்தது. ஆனால் கடும் குளிரில் அந்த கருவிகள் உறைந்துபோய் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான எந்த சிறப்பம்சங்களையும் லேண்டர், ரோவர் ஆகியவை கொண்டிருக்கவில்லை. அதாவது லண்டர், ரோவர் என்பது 14 நாட்கள் ஆய்வுக்காக நிலவுக்கு அனுப்பியதால் இதனை இஸ்ரோ செய்யவில்லை.
இருப்பினும் மீண்டும் சூரியஒளி படும்போது அதன் மூலம் குளிரில் இருக்கும் கருவிகள் சூடேறி மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ நம்பியது. இதனால் தான் மீண்டும் லேண்டர், ரோவரை உயிர்த்தெழ வைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியது. இது 50:50 சதவீத வாய்ப்பு தான் என்றாலும் கூட இந்த முயற்சி கைக்கூடினால் நிலவு குறித்த இன்னும் அதிக தகவல்களை பெற முடியும் என்பதால் இஸ்ரோ அதில் மும்முரமாக இறங்கி உள்ளது.
அதாவது கடந்த 5 நாட்களாக சூரியஒளி பட்டாலும் கூட ரோவர், லேண்டர் இயங்கவில்லை. இதனால் மீண்டும் அது செயல்படுவதற்கான வாய்ப்பு என்பது மங்கிபோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‛‛விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவற்றை கண்விழிக்க வைப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
ஏனென்றால் ஒவ்வொரு மணிநேரமும் முக்கியமானதாகும். தற்போதைய சூழலில் லேண்டர், ரோவர் ஆகியவை விழித்தெழாவிட்டாலும் கூட இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். ஏனென்றால் திட்டமிட்ட காலத்துக்கு இரண்டு கருவிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதோடு ‛சாப்ட் லேண்டிங்' முறையில் இந்தியா தனது திறமையை நிரூபித்துள்ளது'' என்றார்.
இருப்பினும் கூட இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் நிலவில் உள்ள விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தும் பணிகள் என்பது தொடர்ந்து வருகிறது. மொத்தம் 14 நாட்கள் அங்கு பகல் பொழுது இருக்கும். 22ம் தேதி லேண்டர், ரோவரில் சூரியஒளி படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் லேண்டர், ரோவர் கண்விழிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications