தமிழக அரசு பள்ளிகளில் இனி எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

பெற்றோர்கள் வரவேற்பு
முக்கியமாக 2019-20 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.

அங்கன்வாடி பள்ளிகளில் வகுப்புகள்
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாற்றம்
இதனால் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள், மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மீண்டும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படுவதால், அதற்கு தேவையான ஆசிரியர்களை சமூக நலத்துறை தரப்பில் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தனியார் பள்ளி நோக்கி பெற்றோர்?
இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி ஏராளமானோர் படையெடுத்த நிலையில், அரசின் இந்த செயல்பாடு மீண்டும் பெற்றோரை தனியார் பள்ளியை நோக்கி செல்ல தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என்று யோசித்திருந்த பல பெற்றோர் மத்தியில், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications