இன்னும் 15 நாள்தான்.. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்துவிடும்.. துணை முதல்வர் ஓ.பி.எஸ் தகவல்!
இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் அடுத்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இந்த அறிவிப்பை வெளியிடலாம்.

இதற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருடுகிறது. இந்த நிலையில் இன்று நாங்குநேரி தேர்தல் வெற்றியை அடுத்து நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்தது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அதிமுக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதன் பயனாக நாம் வென்று இருக்கிறோம்.
தொண்டர்களின் பணி இதில் அளப்பரியது. உங்கள் பணியால் தற்போது அதிமுக வேட்பாளர்கள் வென்று இருக்கிறார்கள். இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது.
அதன்பின் மீண்டும் தேர்தல் பணிகள் தொடங்கும். தொண்டர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications