பிக்பாஸில் கமல் பிஸி.... உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க முடியலை-என்ன செய்யப் போகிறது ம.நீ.ம.?
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 5-ல் படுபிஸியாக இருக்கிறார். இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்சிப் பணிகள் குறித்து ,கமல்ஹாசனிடம் ஆலோசிக்க முடியவில்லை என்கின்றனராம் அக்கட்சி நிர்வாகிகள்.
சட்டசபை தேர்தலில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. ஆனால் கமல்ஹாசனும் அவரது கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் தேறவில்லை.
இதனையடுத்து தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 2-ம் கட்ட தலைவர்கள் பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். அப்படி வெளியேறியவர்களை மிகக் கடுமையான மொழியில் கமல்ஹாசன் விமர்சித்திருந்தார்.

கமல் அறிவிப்பு
இந்நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை மக்கள் நீதி மய்யம் சந்திக்கும் என்று சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ம.நீ.ம. கட்சி நிர்வாகிகளிடம் நீடித்திருந்த சோர்வை போக்கியது.

பிடிகொடுக்காத கமல்
ஆனால், திடீரென தற்போது கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிடிகொடுக்காமல் இருக்கிறார் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். கடந்த சில நாட்களாக பிக் பாஸ் 5-வது சீசனுக்கான புரமோஷன்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அநேகமாக, அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் 5-வது சீசன் துவங்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸில் பிஸி
இந்நிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலர், கமல்ஹாசனை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க விரும்பியுள்ளனர். அதற்காக கமலிடம் பேசியுள்ளனர். ஆனால், அவர்களால் கமல்ஹாசனை சந்திக்ககூட முடியவில்லையாம். ஏனெனில் பிக் பாஸ் சம்மந்தப்பட்ட ஆலோசனையில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாராம்.
Recommended Video

தேர்தல் தேதி வரட்டுமே..
பின்னர் 2 நாள் கழித்து கமலை சந்திக்க முடியாவிட்டாலும் அவரிடம் பேசும் வாய்ப்பினை பெற்றனர் அந்த மாநில நிர்வாகிகள். அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் ; அதற்காகத்தான் சந்திக்க நினைத்ததை அவர்கள் சொல்லியுள்ளனர். அதற்கு கமல், தேர்தல் அறிவிப்பு வருகிறதா? என பார்ப்போம். வந்தால் அதன் பிறகு பேசலாமே என சொல்லி தொடர்பை துண்டித்துக் கொண்டாராம் கமல்ஹாசன். இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தால் ஒருவேளை நடந்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர் பிஸியில் கமல் இருந்துவிட்டால் தேர்தலை எப்படி மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ளும் ? என்கிற கேள்வி அக்கட்சி வட்டாரங்களில் இப்போதே எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications