சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்பதான் "கல்யாணமே" ஆச்சு.. அதுக்குள்ளயா.. திடீரென சலசலப்பு.. இதுக்கு கமல் தனியாவே நின்னுருக்கலாம்

கமல்ஹாசனின் மய்ய தொண்டர்கள் சமக மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இப்பதான் இந்த கூட்டணி இணைந்தது.. அதுக்குள்ள சமக - மநீம இடையே தொகுதிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறதாம்.

திமுக, அதிமுக என யாருடனாவது இணைந்து தேர்தலை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது சமக.. அவர்கள் தரும் ஒன்று அல்லது 2 சீட்களை வைத்து போட்டியிட்டு வந்தது.. அதில் சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்புகளும் கிடைத்ததை நாம் மறுக்க முடியாது.

ஆனால், இந்த முறை, ஓபனாகவே சரத் சொல்லிவிட்டார்.. அதிமுக கூட்டணியில் ஒன்று, அல்லது 2 சீட் தந்தால் நாங்கள் ஏற்க மாட்டோம்.. எங்கள் பலத்தை பார்த்து நிறைய சீட் தரணும் எனறு கேட்டார்.. அவர் அப்படி கேட்டதோடு சரி, யாரும் இவரை அழைத்து சீட் தரவில்லை.

 அதிமுக தலைமை

அதிமுக தலைமை

பிறகு சசிகலாவை திடீரென சந்தித்து அதிமுக தலைமைக்கு ஒரு ஜெர்க் தர பார்த்தார்.. கடைசியில் அது சமகவுக்குத்தான் ஜெர்க் ஆகிவிட்டது... அதனால், டக்கென கமலை போய் பார்த்தார்.. கூட்டணி வைத்து கொண்டார்.. கமல் என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை.. எடுத்த எடுப்பிலேயே 40 சீட் தூக்கி தந்தார்.. பிறகு 37 சீட் ஓகே ஆனது.. ஆனால் கடைசியில் 37 வேட்பாளர்களை மட்டுமே சமகவால் தேற்ற முடிந்தது.. மிச்சம் இருந்த 3 சீட்டையும் மநீமவிடமே திருப்பி தந்துவிட்டார் சரத்குமார்.

ராதிகா

ராதிகா

இதுவரை எந்த கட்சியுமே தராத அளவுக்கு 37 சீட் தரப்பட்டும், சரத்குமாரும், ராதிகாவும் போட்டியிடவில்லை.. தங்கள் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டி உள்ளதால், போட்டியிட முடியவில்லை என்று காரணம் சொன்னாலும், அதை பெரும்பாலானோர் ஏற்க முன்வரவில்லை. ஒரு கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்வது மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்ற கேள்வியெல்லாம் வேறு விஷயம்.இதுவரை எந்த கட்சியுமே தராத அளவுக்கு 37 சீட் தரப்பட்டும், சரத்குமாரும், ராதிகாவும் போட்டியிடவில்லை.. தங்கள் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டி உள்ளதால், போட்டியிட முடியவில்லை என்று காரணம் சொன்னாலும், அதை பெரும்பாலானோர் ஏற்க முன்வரவில்லை. ஒரு கட்சி தலைவரே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொள்வது மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்ற கேள்வியெல்லாம் வேறு விஷயம்.

 விருதுநகர்

விருதுநகர்

ஆனால், இப்போது தகவல் என்னவென்றால், விருதுநகர் தொகுதி வேண்டும் என்று சரத்குமார் கேட்டிருக்கிறார் போலும்.. அதற்கு காரணம் சமூக வாக்குகள் நிறைய கிடைக்கும், எளிதாக வெற்றி பெறலாம் என்பதே சரத்குமார் கணக்கு.. ஆனால், இதே விருதுநகரில் சமகவுக்கு இருக்கும் ஆதரவைவிட மய்யத்துக்கு ஆதரவு நிறைய இருக்கிறதாம். அதனால், இந்த தொகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று மய்ய நிர்வாகிகள் ஓபனாகவே சொல்லிவிடவும்தான், வேறு வழி இல்லாமல் சரத்குமார் ஒதுங்கி கொண்டதாக சொல்கிறார்கள்.

 வேட்பு மனுக்கள்

வேட்பு மனுக்கள்

இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சமகவுக்கு நெல்லை, விருதுநகர், ராஜபாளையம், ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.. ஆனால், நெல்லை, ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில், சமக வேட்பு மனுக்கள் முறையாக இல்லாததால், தள்ளுபடியானதாக தெரிகிறது.. இதனால், மய்ய நிர்வாகிகள் மேலும் கடுப்பில் உள்ளனராம்.. காரணம், விருதுநகர், ராஜபாளையம் தொகுதிகளில்கூட, மய்யத்துக்கு பெரும்பாலான ஓட்டு வங்கி இருப்பதாக தெரிகிறது.

 அப்செட்

அப்செட்

இதனால் மய்யத்தினர் அப்செட்டில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. பொதுவாக, கூட்டணிக்குள் அனைவரும் இணக்கமாக இருந்தால்தான் தேர்தல் வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்து, கூட்டணி கட்சியை வெற்றி பெற வைப்பார்கள்.. ஆனால், இது சமக விஷயத்தில் மாறுபடுகிறது.

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

இதில் இன்னொன்றும் தெரியவருகிறது. சீனியர் சமகவைவிட, ஜூனியர் மய்யம், தமிழகம் முழுவதும் விஸ்வரூப வளர்ச்சி பெற்று வருவதாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை சமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மய்யமே நேரிடியாக போட்டியிட்டிருந்தாலும், நிச்சயம் கணிசமான வாக்கு வங்கியை பெற்றிருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது...

சமக

சமக

இதைதவிர, மநீம - சமக கூட்டணியில் பேச்சாளர்களும் மிகவும் குறைவு.. சமகவை பொறுத்தவரை ராதிகாவும், சரத்குமாரும் தான் வாக்கு சேகரித்தாக வேண்டும்.. அந்த கட்சியில் வேறு யாரும் மக்களிடம் பிரபலமானவர்களாக தெரியவில்லை.. தங்களுக்கு இருக்கும் 37 பேருக்கே பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.. மய்யத்தில் கமல் மட்டுமே எல்லாருக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.. கிட்டத்தட்ட இதுவும் தேமுதிக நிலைமை போலத்தான்.. பிரச்சார பீரங்கிகள் இல்லாமலும் இந்த கூட்டணி தவிப்பதாகவே தெரிகிறது.. பார்ப்போம்..!

English summary
Local Politics between Kamalhasans MNM and Sarathkumars SMK, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X