இது சூப்பர்.. ஓவர் நைட்டில் அதிரடி.. தமிழக அரசின் திடீர் அறிவிப்பு.. சென்னைவாசிகள் செம ஹேப்பி!
சென்னை: ஓவர் நைட்டில் என்ன ஆனது என்றே தெரியவில்லை.. மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று சாயங்காலம் வெளியான அறிவிப்பு, தற்போது அது சென்னையில் மட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது... மிகுந்த சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த திடீர் அறிவிப்பினை பலரும் வரவேற்றுள்ளனர்!
Recommended Video
ஊரடங்கு தளர்வு என்ற பேச்சு வரும்போதெல்லாம் மதுக்கடைகளை திறந்து விடுவார்களோ என்று தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உள்ளுக்குள் உதறல் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால் எங்கெங்கு தளர்வுகள் என்று சொல்லப்பட்ட லிஸ்ட்டில் மதுக்கடைகள் இடம்பெறாமலேயே இருந்தது.. இது மக்களுக்கு நிம்மதியை தந்தபடியே இருந்தது.
இந்த நேரத்தில்தான், திடீரென கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்தது.. அதனால் நிச்சயம் மதுக்கடைகளை திறக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது.. யாருக்கும் மதுக்கடைகள் திறப்பு பற்றின சந்தேகம்கூட வரவில்லை.. நேற்று வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை கூடியதுமே எல்லாருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. அடுத்த சில மணி நேரங்களிலேயே மதுக்கடைகள் 7-ம்தேதி முதல் திறப்பு என்ற செய்தி வெளியானதும் மக்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.

அண்டை மாநிலங்கள்
அண்டை மாநில எல்லைகளில் மதுவுக்காக மக்கள் திரண்டு செல்வதால் இந்த அறிவிப்பு என்று காரணமும் சொல்லப்பட்டது.. ஆனால் அண்டை மாநில எல்லைகளை அரசு மூட முடியாதா? தடையை மீறி செல்பவர்களை கைது செய்ய உள்ளே தள்ள முடியாதா? அண்டை மாநிலத்துக்கு நூற்றுக்கணக்கானோர் சென்றதற்காக ஒன்றரை கோடி குடும்பங்களை நாசம் செய்வது சரியா? ஒரு நாளுக்கு 50, 60 பாசிட்டிவ் கேஸ்கள் வந்தபோது லாக்டவுன் போட்டுவிட்டு 500-ஐ தாண்டும்போது கடை திறப்பது நியாயமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

கூட்டணி
இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன.. இதில் திமுகவைவிட, முதல் ஆளாக வந்து கண்டனத்தை பதிவு செய்தது கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ்தான்.. அவரால் இந்த அறிவிப்பினை ஜீரணிக்கவே முடியவில்லை.. உடனடியாக இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டு கேட்டுக் கொண்டார். விசிக தலைவர் திருமாவளவனோ "அப்படி என்ன தேவை எழுந்தது? ஒரே இடத்தில் கும்பல் கூடுவதற்குத்தானே இது வழிவகுக்கும்? கொரோனாவுக்குத்தானே இது குதூகலம் அளிக்கும்? கும்பல் கூடாதே என்று பரப்புரை ஒருபுறம்; கும்பல் கூடுவதற்கு வழிவகுப்பது இன்னொருபுறம். முன்னுக்குப்பின் எவ்வளவு பெரிய முரண்பாடு இது? எவ்வளவு குரூரமான மக்கள் துரோகம் இது?" என்று காட்டமான கேள்விகளை எழுப்பினார்.

பாதிப்பு
அதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலினும், "ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மே 7-ம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்

கமல்ஹாசன்
"கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.... அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு" என்று கொக்கரித்தார் கமல்ஹாசன். ரூ.1000த்தைக் கொடுத்து விட்டு அதை வட்டியுடன் வசூலிக்க திட்டமா? மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியா என்று காட்டமான கேள்வி எழுப்பினார் ஜவாஹிருல்லா..

செல்லுர் ராஜு
"மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது. அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம்" என்று சீறினார் சீமான். உயிரோடு விளையாடுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று நேரடியாகவே சுட்டிக்காட்டி பாய்ந்தார் டிடிவி தினகரன்!! "குடிமகன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முதல்வர் முடிவு செய்தார். எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது" என்று அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லும் விளக்கம் நமக்கு முழு திருப்தியை தரவில்லை.

நல்ல செய்தி
அதேசமயம், இப்போதைக்கு சென்னையில் மட்டும் கடை திறக்கப்படாது என்ற நல்ல செய்தி வந்துள்ளது.. அதிக பாதிப்பு சென்னையில் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. ஆனால் மது வாங்க சென்னைவாசிகள் வெளியூர், வெளிமாவட்டங்களுக்கு கிளம்பி சென்றால், அதன்மூலமும் சென்னைக்கு தொற்று பரவக்கூடும் என்பதே இதில் உள்ள அபாயம்!!

திறக்கவே வேண்டாம்
தமிழக முதல்வரை பொறுத்தவரை, கொரோனோ தடுப்பில் இந்திய அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநில அரசுகளில் ஒன்று என்ற பெயரை வாங்கியவர்.. பொதுமக்களிடம் நெருங்கியே இருப்பவர்.. யார், என்ன உதவி கேட்டாலும் தட்டாமல், தயங்காமல் உடனடியாக செய்பவர்.. எளிமையான முதல்வர்களில் முன்னிலையில் உள்ளவர்.. கடந்த 2 மாதமாக முதல்வரின் செயல்பாடுகள் கட்சி பேதமின்றி அனைவரையுமே நெகிழ வைத்து வரும்நிலையில், மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பினை மட்டும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை... சென்னையை போலவே தமிழகம் முழுவதும் முதல்வர் மதுக்கடைகளை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!












Click it and Unblock the Notifications