சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய இ-பாஸ் செல்லாது.. பணிக்கு செல்ல அனுமதி சீட்டு அவசியம்.. சென்னையில் வரும் புதிய கட்டுப்பாடு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு மாவட்டங்களில் இ- பாஸ் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது.

Recommended Video

    சென்னை முழு லாக்டவுனில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா?

    தமிழகத்திலும் சென்னையிலும் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் 1200+ கேஸ்கள் வந்தபடி இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். இங்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    களமிறங்கிய 20000 போலீஸ்.. 400 செக்போஸ்ட்.. 2 கிமீ தாண்டி சென்றாலே செக்.. சென்னையில் மாஸ் கட்டுப்பாடுகளமிறங்கிய 20000 போலீஸ்.. 400 செக்போஸ்ட்.. 2 கிமீ தாண்டி சென்றாலே செக்.. சென்னையில் மாஸ் கட்டுப்பாடு

    இ பாஸ்

    இ பாஸ்

    சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு மாவட்டங்களில் இ- பாஸ் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த நான்கு மாவட்டங்களில் மக்கள் ஏற்கனவே வாங்கி வைத்து இருந்த பழைய இ பாஸ் செல்லாது. இது காலாவதியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை வெளியே எடுத்து சென்றால் போலீஸ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

    விண்ணப்பிக்க வேண்டும்

    விண்ணப்பிக்க வேண்டும்

    அதேபோல் இ பாஸ் இல்லாமல் வாகனத்தில் சென்றால் வழக்கு பாயும். இதனால் நீங்கள் முன்பு பெற்ற இ பாஸை புதுப்பிக்க வேண்டும். அதன்பின் அதையே பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி இ பாஸ் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் உங்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும். இப்படிப்பட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கூறியுள்ளது.

    பயண சீட்டு

    பயண சீட்டு

    ஆனால் ஏற்கனவே திருமண, துக்க நிகழ்வு, மருத்துவ சிகிச்சைக்காக இ பாஸ் பெற்றவர்கள் அதை புதுப்பிக்க தேவையில்லை. இவர்கள் தங்களின் பழைய பாஸை பயன்படுத்தலாம். விமான ரயில் சேவை பயன்படுத்தும் மக்கள் அதற்கான பயணசீட்டு வைத்து இருந்தால் தனியார் வாகனங்களில் செல்லலாம். இ. பாஸ் அவசியம். அதேபோல் இவர்கள் ஆட்டோ டாக்சி போன்ற வாகனங்களிலும் செல்லலாம்.

    அவசியம்

    அவசியம்

    அதேபோல் அரசு அனுமதித்துள்ளபடி மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் 33% பணியாளர்கள் பணியாற்ற முடியும். ஆனால் வேலைக்குச் செல்லும் போது அதற்கான அனுமதிச் சீட்டினை பெற்று இருக்க வேண்டும். இதை போலீசாரிடம் காட்ட வேண்டும். பெரிய அளவில் A5 அளவில் பிரின்ட் எடுத்து அதை பைக்கில் அல்லது கழுத்தில் தொங்க விட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Lockdown in Chennai: Old E Pass won't be valid from today in the capital of TN .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X