தமிழகம் முழுக்க ஜூலை 1 முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.. 15 நாட்களுக்கு கட்டுப்பாடு.. அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் எப்போதும் போல தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட 5 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பழைய தளர்வுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஜூலை 5 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து

பேருந்து போக்குவரத்து

இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து மொத்தமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இந்த லாக்டவுன் பொருத்தம்.

எப்படி இருந்தது

எப்படி இருந்தது

முன்பு மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது மாவட்டங்களுக்கு உள்ளேயே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக தமிழ்கத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. தனியார் பேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும்.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

இந்த கட்டுப்பாடு ஜூலை 1ம் தேதிதான் அமலுக்கு வரும். அதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு பேருந்து போக்குவரத்து இருக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மாவட்டத்திற்கு உள்ளே போக்குவரத்து இருக்கிறது. அதன்பின் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் மாவட்டத்திற்குள் இப்போதே பேருந்து மூலம் பயணிக்க நினைப்பவர்கள் பயணிக்கலாம்.

மற்ற போக்குவரத்து

மற்ற போக்குவரத்து

மேலும் மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில் எப்போதும் போல செயல்படாது. இதன் மூலம் போக்குவரத்தில் தமிழ்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அன்லாக் 2.. நாடு முழுக்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய அரசு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+