தீவிர லாக்டவுன்.. போக்குவரத்து கட்டுப்பாடு.. இன்று மாலை தமிழக முதல்வர் பிரஸ் மீட்.. முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சியர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்தார். இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

தமிழகத்தில் எவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பப்பட்டாலும் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்தபடி இருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இந்த 4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நினைத்ததை விட வேகமாக சென்னையில் தினமும் கேஸ்கள் வருகிறது.

சென்னை நிலைமை

சென்னை நிலைமை

சென்னையில் இப்படி லாக்டவுன் கொண்டு வரப்பட்டு இருந்தாலும் கூட தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கிறது. தினமும் 1500 கேஸ்கள் வீதம் சென்னையில் மட்டும் வருகிறது. சென்னையில் மட்டுமின்றி தற்போது கோவை, மதுரை, தேனி, டெல்டா மாவட்டங்களிலும் கூட கொரோனா கேஸ்கள் வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

அதிகம் வருகிறது

அதிகம் வருகிறது

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் மூலமாக இப்படி கொரோனா கேஸ்கள் அதிகம் பரவியது. இதில் ஒரே ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் இவர்கள் எல்லோரும் அந்தந்த மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் கொரோனா பரவல் ஊருக்குள் செல்லவில்லை.

மாவட்டம் நிலைமை என்ன

மாவட்டம் நிலைமை என்ன

இந்த நிலையில் பல மாவட்டங்களில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தொடர்ந்து தற்போது மற்ற மாவட்டங்களிலும் லாக்டவுன் அமலுக்கு வர தொடங்கி உள்ளது. மதுரை, தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கொரோனா கேஸ்கள் அதிகம் இருப்பதால் லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது.

முழு லாக்டவுன்

முழு லாக்டவுன்

இந்த நிலையில் தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களிலும் லாக்டவுன் வருமா , தமிழகம் முழுக்க மீண்டும் முழு லாக்டவுன் வருமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சியர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்தார். காலை 10 மணிக்கு நடந்த இந்த மீட்டிங்கில் லாக்டவுன் குறித்தும் , கொரோனா பரவல் குறித்தும் இன்று ஆலோசித்து உள்ளனர்.

Recommended Video

    7 நாட்கள் முழு லாக்டவுன் அமல் - முடங்கியது மதுரை
    முடிவு

    முடிவு

    இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்கிறார்கள். மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை நிறுத்த ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும் போக்குவரத்து இருக்கலாம் என்று ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்று மாலை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+