Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்டுக்கிளிகள் - பயங்கர நிலநடுக்கம்-பெரும் புயல்- அண்டை நாடுகளுடன் யுத்தம்- எச்சரிக்கும் பஞ்சாங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, வங்க கடலில் பயங்கர நிலநடுக்கம், பெரும் புயல் ஏற்படும் மற்றும் அண்டை நாடுகளுடனான யுத்தம் ஏற்படும் என்று நடப்பாண்டு பஞ்சாங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Recommended Video

    Arcot Panchangam 2020 | எச்சரிக்கும் பஞ்சாங்கம்

    ஆப்பிரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளிகள் வட இந்தியாவில் பெரும் நாசத்தை விளைவித்து வருகின்றன. வட இந்தியாவைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கு இந்த வெட்டுக் கிளிகளால் பேராபத்து காத்திருக்கிறது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தில் 17-ம் நூற்றாண்டில் மிகப் பெரிய பேரழிவை இத்தகைய வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தி இருந்தன. இதனை தமிழ் இலக்கியங்கள் பல நூல்களில் பதிவு செய்திருக்கின்றன. தற்போதும் இந்த அச்சம் எழுந்துள்ளது.

     சீனா- கொல்கத்தா வெள்ளம்

    சீனா- கொல்கத்தா வெள்ளம்

    இதேபோல் லடாக், சிக்கிம் எல்லையில் சீனாவுடன் யுத்தம் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எல்லையில் தமது படைகளை சீனா குவித்து வருகிறது. இந்தியாவும் சீனாவுக்கு பதிலடி தர காத்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் மிகப் பெரிய இயற்கை பேரழிவாக அம்பன் (ஆம்பன், உம்பன்) புயல் வங்கக் கடலில் மையம் கொண்டு மேற்கு வங்கம், ஒடிஷாவை புரட்டிப் போட்டது. மேற்கு வங்கத்துக்கும் ஒடிஷாவுக்கும் இடையே கரையை கடந்த அம்பன் புயல் கொல்கத்தா நகரையே வெள்ளத்தில் மிதக்கவிட்டது.

     வெட்டுக் கிளி தாக்குதல்

    வெட்டுக் கிளி தாக்குதல்

    இந்த நிகழ்வுகள் அனைத்தையுமே நடப்பாண்டுக்கான பஞ்சாங்கங்களும் கணித்திருக்கின்றன. சார்வாரி வருஷத்திய ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தில் இந்த நிகழ்வுகள் தொடர்பான இடம்பெற்றுள்ளவை: இவ்வாண்டு வெட்டுக் கிளி பூச்சிகள் ரீங்காரம் செய்தலும் தவளைகள் கத்துதலும் செங்கள் சூளை நன்றாகவே நடப்பதும் மருத்துவர்களுக்கு அடிக்கடி ஊக்க தொகை கிடைப்பதும் நன்றாகவே நடக்கும்.

     யுத்தம் வரும்

    யுத்தம் வரும்

    வானத்தில் புதிய நட்சத்திரம் உருவாகி மறைவதால் மின்காந்த அலை பாதித்து வான்வெளி போக்குவரத்தில் பிரச்சனை உண்டாகும். செல் டவர்கள், டிஸ் கம்பிகள் பாதிக்கும். அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கெண்டம் ஏற்படும். முக்கிய தீவிரவாதிகளால் நாச வேலை ஏற்படும். அண்டை நாடான சீனா, பாகிஸ்தான், போன்றவை வலுக்கட்டாயமாக சண்டைக்கு வர நேரும்.

     பெரும் நிலநடுக்கம்- புயல்

    பெரும் நிலநடுக்கம்- புயல்

    வங்கக் கடலின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக பெரும் புயல் உற்பத்தி ஆகி தமிழ்நாடு, கர்நாடகா, பம்பாய், கல்கத்தா, கேரளா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். தமிழ்நாட்டை பலமாகத் தாக்கும். இவ்வாறு ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+