17-ம் நூற்றாண்டில் மதுரை மீது வட இந்தியாவில் இருந்து படையெடுத்து சர்வநாசமாக்கிய வெட்டுக் கிளிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு தற்போது எப்படி வெட்டுக் கிளிகளால் பேராபத்தை எதிர்கொண்டிருக்கிறதோ அதேபோல் 17-ம் நூற்றாண்டில் மதுரை மாநகரமும் பேரழிவையே சந்தித்திருக்கிறது என்கிறது வரலாறு.

Recommended Video

    17ம் நூற்றாண்டில் மதுரையை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்

    சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    17-ம் நூற்றாண்டு

    17-ம் நூற்றாண்டு

    17ஆம் நூற்றாண்டில் சொக்கநாதன் ஆட்சியில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு மதுரை உள்ளானதாக காவல் கோட்டம் நாவலில் பதிவு செய்துள்ளார் சுவெ. (சு.வெங்கடேசன் எம்.பி) காவல் கோட்டத்திலிருந்து " சொக்கநாதன் காலத்தில் வானில் தூமகேது தோன்றியது. நிமித்தகர்கள் அதைச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர்.அதற்கேற்றாற்போல ஒரு மாதத்தில் நம்ப முடியாத பேரழிவு விவசாயத்தில் நேர்ந்தது. வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன.

    வட இந்திய வெட்டுக் கிளிகள்

    வட இந்திய வெட்டுக் கிளிகள்

    ஒவ்வொன்றும் சோளக்கதிர் அளவு பெரிதாக இருந்தது. மேகக்கூட்டங்கள் போல வந்து அப்படியே செடிகொடிகள் பயிர்களின் மீது மொய்த்தன. நிலமெங்கும் பெருமழை அடிப்பதுபோல நெறுநெறுவென்று சப்தம். அவை எழுந்து பறந்தவுடன் இலைகளற்ற வெறுந்தண்டுகளே எஞ்சின. இரண்டு நாள் படை படையாகத் தெற்கு நோக்கிச் சென்றன. நாடே பசுமையற்று மொட்டையாகப் போய்விட்டது. மாசி மாதம் கதிரடிப்புக் களங்களில் புழுதி பறந்தது.மீண்டும் தூமகேது தோன்றியது.

    பட்டினி துயரம்

    பட்டினி துயரம்

    இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. மக்கள் சாணாக் கிழங்குகளைத் தேடிக் காடெல்லாம் அலைந்தனர்.தாதனூரில் பாதிப் பிள்ளைகள் வயிற்றுப் போக்கில் மடிந்தனர். சண்டாள பேதி பரவத் தொடங்கியது. உயிரைத் தக்க வைத்தவர்கள் இறந்தவர்களைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குப் போனார்கள். எல்லா ஊர்களிலும் நாளெல்லாம் சனங்கள் சுடுகாட்டில் கும்பல் கும்பலாக நின்றிருந்தனர்.புதைக்க இடமில்லாமல் ஆனது. தீ எரிந்துகொண்டே இருந்தது.

    ஆங்கிலேயர் நூல்களில் பதிவு

    ஆங்கிலேயர் நூல்களில் பதிவு

    மூன்றாண்டுகள் கழித்து நிலைமை இயல்புக்கு மீண்டபோது மூன்றிலொரு பங்கு மக்கள் சுடுகாட்டிலும் மீதிப் பேர் உயிரைப் பிடித்துக்கொண்டு ஊர்களிலும் இருந்தனர்." இது குறித்து பிரான்சிஸின் மதுரை Gazatte மற்றும் நெல்சனின் "மதுரை அரசியல் வரலாறு" நூல்களிலும் குறிப்பு உள்ளது இவ்வாறு சுந்தரராஜன் பதிவு செய்துள்ளார். மதுரையில் சொக்கநாத மன்னரின் ஆட்சிக் காலம் கி.பி. 1662-1682 என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+