நீண்ட இழுபறிக்குப் பின் நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்! விளவங்கோடு- தாரகை போட்டி!
சென்னை: லோக்சபா தேர்தலில் திருநெல்வேலி (நெல்லை) தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்களை அறிவித்தது.

தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருநெல்வேலி லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. இதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரையும் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இருந்தது.
திருநெல்வேலியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வேட்பாளராகும் கனவில் இருந்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் முட்டி மோதினர். இவர்களில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் நெல்லை மாவட்டத்தைச் சேராத ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடாது என திடீரென திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் திருநெல்வேலி வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியது காங்கிரஸ்.
இதனையடுத்து திருநெல்வேலி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச் சோழன் முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் சிம்லா முத்துச் சோழன் என்கிற விமர்சனங்கள் எழுந்ததால் அவர் மாற்றப்பட்டு ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக கூட்டணியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக களம் காண்கிறார். நயினார் நாகேந்திரன், முதலில் தூத்துக்குடி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் நெல்லை பாஜக வேட்பாளராக மாற்றப்பட்டார். தற்போது காங்கிரஸிலும் நீண்ட இழுபறிப்புக்குப் பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications