1991-க்கு பின் தமிழகத்தில் 10 இடங்களுக்கு மேல் வெல்லாத காங்; திமுகவிடம் 15-18 தொகுதிகள் கேட்குதாமே?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஜனவரி 28-ந் தேதி தொடங்க உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 15 முதல் 18 இடங்களை ஒதுக்க வேண்டும் என திமுக குழுவிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் "இந்தியா" கூட்டணி கட்சிகள் காங்கிரஸுக்கு மிக மிக சொற்பமான இடங்களைத்தான் ஒதுக்குகின்றன. குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம், பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களில் போனால் போகிறது என்கிற போக்கில்தான் காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் இடங்களைக் கொடுக்க திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகள் முன்வந்துள்ளன. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கூட்டணி கட்சிகளிடம் 'கவுரவமான' இடங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

ஜனவரி 28-ல் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியே வெல்லும் வாய்ப்புள்ளது என அனைத்து கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியிலும் ஜனவரி 28 முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. ஜனவரி 28-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சி குழுவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
15 முதல் 18 இடங்கள் கேட்கும் காங்கிரஸ்?: திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 8 அல்லது 9 தொகுதிகள்தான் என கணக்குப் போட்டு வைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்போ, தமிழ்நாட்டில் காங்கிரஸ் முன்பைவிட வளர்ந்துவிட்டது; அதுவும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பின்னர் இரு மடங்கு வளர்ந்துவிட்டது; அதனால் 8,9 தொகுதிகள் எல்லாம் காங்கிரஸுக்கு போதாது; அதிகபட்சம் 18 தொகுதிகளை கேட்போம்; குறைந்தபட்சம் 15 தொகுதிகளைப் பெற்றே தீருவோம் என ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்கின்றனராம்.
பேராசை கூடாது என எச்சரிக்கும் திமுக: இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் பேசிய போது, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 18 தொகுதிகள் என்ன 50:50 கூட கேட்கிற காங்கிரஸுக்கு உரிமை உள்ளது. ஆனால் கள நிலவரம் என்ன என்பதை காங்கிரஸ் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். உதாரணமாக திருச்சி, கரூர், சிவகங்கை போன்ற தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுப்பதாக வைத்துக் கொண்டால் அக்கட்சியால் 100% வெற்றி பெறுவோம் என உத்தரவாதம் தர முடியுமா? ஆசைப்படலாம்தான்.. அதுக்காக பேராசைப்பட்டால் உள்ளதும் போச்சுடா என்கிற கதைதான் காங்கிரஸுக்கு என எச்சரிக்கின்றனர்.
10 சீட்டுக்கு மேல ஜெயிக்காத காங்கிரஸ்: மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 10 இடங்களுக்கு அதிகமாக வென்றதாக சரித்திரமே இல்லை. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையால் மொத்தம் உள்ள 39 இடங்களில் 28-ல் காங்கிரஸ் வென்றது; ஆனால் 1996, 1998 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 2 இடத்திலும் 2004-ல் 10 இடங்களிலும் காங்கிரஸ் வென்றது. 2009-ல் 8 இடத்தில் வென்ற காங்கிரஸ் 2014 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 2019-ல் திமுக கூட்டணியில் இடம் பெற்று 8 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் சரித்திரம் என புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர் திமுக நிர்வாகிகள்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications