இது வேலைக்கு ஆகாது.. அண்ணாமலை அனுப்பிய லிஸ்ட்.. டெல்லி பாஜக கசப்பான முடிவு.. ஓ இதுதானா பின்னணியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி இருக்கும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. நேற்றுதான் திமுக - மதிமுக, சிபிஐ, சிபிஎம் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Lok Sabha election 2024: Delhi BJP is not happy with the alliance of Tamil Nadu BJP without AIADMK

அதிமுக ஆலோசனை: இன்னொரு பக்கம் அதிமுகவும் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக ஆலோசனை செய்து வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்து வருகிறது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர்.

பாஜக மூன்றாவது அணி: இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lok Sabha election 2024: Delhi BJP is not happy with the alliance of Tamil Nadu BJP without AIADMK

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.

பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.

மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

விரும்பவில்லை: லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி இருக்கும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் உருவாக்கப்படும் கூட்டணியை டெல்லி பாஜக விரும்பவில்லையாம்.

இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பிப்.11-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். பிரதமர் மோடி பிப்.25-ம் தேதி சென்னை வருகை புரிய உள்ளார். அதற்கு முன்பாக நட்டா கூட்டணியை இறுதி செய்ய உள்ளார்.

இதில் அதிமுக கூட்டணியை அவர் உறுதி செய்யும் திட்டத்தில் உள்ளாராம். அதிமுக இல்லாமல் அண்ணாமலை அனுப்பிய கூட்டணி லிஸ்டை டெல்லி பாஜக ஏற்கவில்லையாம். மோடி வருவதற்கு முன் புதிய கூட்டணியை உருவாக்குவதே நட்டாவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

Lok Sabha election 2024: Delhi BJP is not happy with the alliance of Tamil Nadu BJP without AIADMK

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்பவில்லையாம். இந்த முறை பெரும்பாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும், புதிய பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இது போக பாமக, தேமுதிகவை உள்ளே இழுக்க அதிமுக தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் பாஜக வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உள்ளது.

கண்டிப்பு: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 9ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+