‛‛பாஜகவுக்கு வாய்ப்பில்லை’’.. ‛இந்தியா’ கூட்டணிக்கு தான் மெஜாரிட்டி.. எக்ஸிட் போலில் மெகா ட்விஸ்ட்
சென்னை: லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணிக்கு மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான 273 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், பாஜகவுக்கு பெரும்பான்மையை விட சற்று குறைவான இடங்கள் தான் கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 533 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 273 தொகுதிகளில் வெல்லும் கட்சியால் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். கடந்த 2014, 2019 தேர்தல்களில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட பாஜக தனி மெஜாரிட்டியை பெற்றது.

தற்போது நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலிலும் வென்று மத்தியில் ஹாட்ரிக் முறையில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி பணி செய்தன.
இந்நிலையில் தான் நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று 7 வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் என்பது முடிவடைந்தது. இதையடுத்து நேற்று முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெரிவித்துள்ளன.
10க்கும் மேற்பட்ட கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் பல்வேறு சர்வேக்களை மேற்கொண்டு வரும் போல் டிராக்கர் எனும் அமைப்பின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் இந்தியா கூட்டணிக்கு 237 முதல் 273 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணிக்கு அதனை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ அதேபோல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 229 முதல் 268 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், மற்றவர்கள் 25 முத்ல 39 தொகுதிகளிலும் வெல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் ‛இந்தியா' கூட்டணிக்கு அதிக இடம் கிடைக்கும் என கூறப்பட்டாலும் கூட பாஜகவும் அந்த கூட்டணிக்கு சமமாக பெரும்பான்மையை விட 5 தொகுதிகள் குறைவாக பெறும் என கூறியிருப்பதன் மூலம் லோக்சபா தேர்தல் முடிவு என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications