தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட இந்தியா முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நாளை நடக்கிறது.
நாட்டின் 18-வது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடக்க போகின்றன.. இதில், முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை அதாவது ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது.

சட்டப்பேரவை தொகுதி: இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் நாளையே நடக்கிறது.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் உட்பட 102 தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.. இநத் 39 தொகுதிகளிலும், திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல, தனித்தே களமிறங்கியிருக்கிறது. ஆக மொத்தம் 4 முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது.
தலைவர்கள்: கடந்த மார்ச் 31-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே பிரச்சாரமும் தமிழகம் முழுவதும் ஆரம்பமாயின.. தமிழகத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுமே, தங்களது வேட்பாளர்களுக்காகவும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.
அதேபோல, தேசிய தலைவர்களும் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு வருகை தந்தவாறே இருநத்னர்.. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என தேசிய தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த 17 நாட்களாக தமிழகத்தில் நடந்துவந்த பிரச்சாரங்கள், நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
பிரச்சாரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜிகே வாசன்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலையுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டன. தொகுதி வாக்காளர்கள் அல்லாத அனைவரும் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications