‛பிராமணர்கள் இல்லை’..தமிழக பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் எந்த ஜாதிக்கு அதிக வேட்பாளர்கள் உள்ளனர்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு லோக்சபா தொகுதியும் உள்ளன. இந்த 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வரும் தேர்தலில் தமிழகதத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

Lok Sabha Election 2024 Which community gets more candidates in BJP and its alliance in Tamil Nadu details here

அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவ உள்ளது. இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண உள்ளன.

இதில் பாஜக கூட்டணியில் ராமதாஸின் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, டிடிவி தினகரனின் அமமுக, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற மக்கள் கட்சி, தேவநாதனின் கட்சி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் இடம் பெற்றுள்ளன.

திமுகவின் 21 வேட்பாளர்கள்.. எந்த ஜாதிக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது தெரியுமா?


இதில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும், ஓபிஎஸ் அணி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, தமுமக, இமகமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிராமணர்களுக்கு வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

உங்கள் தொகுதியில் யார் போட்டி? 40 நாம் தமிழர் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த சீமான்! முழு பட்டியல்


பாஜக வேட்பாளர்கள்

வடசென்னை - பால் கனகராஜ் - நாடார்

தென்சென்னை - தமிழிசை சவுந்தரராஜன் - நாடார்

மத்திய சென்னை - வினோஜ் பி செல்வம் - செட்டியார்

திருவள்ளூர் - பாலகணபதி - தேவேந்திர குல வேளாளர்

யாருமே யோசிக்காத ஸ்கெட்ச்.. அத்தனை கட்சிகளுக்கும் "பாடம் கற்பிக்க" விஜய் ரசிகர்கள் வேற லெவல் திட்டம்

கிருஷ்ணகிரி - நரசிம்மன் - கொங்கு வேளாளர் கவுண்டர்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன் - வன்னியர்

நாமக்கல் - கேபி ராமலிங்கம் - கொங்கு வேளாளர் கவுண்டர்

திருப்பூர் - ஏபி முருகானந்தம் - கொங்கு வேளாளர் கவுண்டர்

நீலகிரி எல் முருகன் - அருந்ததியர்

கோவை - அண்ணாமலை - கொங்கு வேளாளர் கவுண்டர்

பொள்ளாச்சி வசந்தராஜன் - கொங்கு வேளாளர் கவுண்டர்

கரூர் செந்தில் நாதன் - கொங்கு வேளாளர் கவுண்டர்

சிதம்பரம் கார்த்தியாயினி - பறையர்

நாகை - எஸ்ஜிஎம் ரமேஷ் - தேவேந்திர குல வேளாளர்

தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம் - அகமுடையார்

மதுரை - இராம சீனிவாசன் - ரெட்டியார்

விருதுநகர் ராதிகா சரத்குமார் - நாயுடு

திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் - மறவர்

கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன் - நாடார்

புதுச்சேரி - நமச்சிவாயம் - வன்னியர்

ஈரோடு - விஜயகுமார் (தமாக) - கொங்கு வேளாளர் கவுண்டர்

ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால் (தமாக)- நாயுடு

ராமநாதபுரம் - ஓ பன்னீர் செல்வம் (அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு) - மறவர்

வேலூர் - ஏசி சண்முகம் (புதிய நீதிக்கட்சி) - முதலியார்

பெரம்பலூர் - பாரிவேந்தர் (ஐஜேகே) - பார்க்கவல உடையார்

தென்காசி - ஜான்பாண்டியன் (தமமுக) - தேவேந்திர குல வேளாளர்

சிவகங்கை - தேவநாதன் (இமகமுக) யாதவர்

திண்டுக்கல் - திலகபாமா (பாமக)- நாடார்

மயிலாடுதுறை - மக ஸ்டாலின் (பாமக) - வன்னியர்

கடலூர் - தங்கர் பச்சான் (பாமக)- வன்னியர்

அரக்கோணம் - வழக்கறிஞர் பாலு (பாமக) - வன்னியர்

தருமபுரி - சவுமியா அன்புமணி (பாமக)- வன்னியர்

ஆரணி - கணேஷ் குமார் (பாமக)- வன்னியர்

விழுப்புரம் - முரளி சங்கர் (பாமக)- பறையர்

கள்ளக்குறிச்சி - தேவதாஸ் (பாமக)- உடையார்

சேலம் - அண்ணாதுரை (பாமக)- வன்னியர்

அமமுக சார்பில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் மற்றும் திருச்சி தொகுதியில் செந்தில் நாதன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேரும் முக்குலத்தோரில் கள்ளர் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+