காங்கிரஸுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி? ஜனவரி 28-ல் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ முதல் கட்ட பேச்சுவார்த்தை வரும் 28-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2- வது வாரம் வரை நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Lok Sabha Election: I.N.D.I.A. bloc DMK- Congress to hold seat sharing talks on Jan.28


லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. "இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை கடும் அதிருப்திகளுக்கு இடையேயும் நடைபெற்று வருகிறது.

தேர்தல் குழுக்கள்: தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணிக்கு ஆளும் திமுக தலைமை வகிக்கிறது. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக, முஸ்லிம் லீக், தவாக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் குழுக்களை திமுகவும் காங்கிரஸும் ஏற்கனவே அறிவித்துள்ளன.

திமுக முன்வைக்கும் தொகுதி பங்கீடு பார்முலா- கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கப் போகும் இடங்கள் இவைதானாம்!

திமுக- காங்கிரஸ் தொகுதிகள்: லோக்சபா தேர்தலில் திமுக அணியைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உருவாக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு பார்முலாவையே கடைபிடிக்கலாம் என திமுக தெரிவித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இந்த முறை 8 அல்லது 9 இடங்களை கொடுக்க திமுக தயாராக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் 15 தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து கொண்டிருக்கின்றன.

பாமக இணைந்தால்.. ? : திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் காங்கிரஸுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும் நிலையும் உள்ளது. இதனால் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்குமா? அல்லது அண்ணா திமுகவை நோக்கி நகருமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு எத்தனை சீட்? எந்தெந்த தொகுதிகள்?

ஜன.28-ல் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் சென்னையில் வரும் 28-ந் தேதி திமுக- காங்கிரஸ் கட்சிகளிடையேயான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுகவின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு டிஆர் பாலு எம்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாஜி அமைச்சர் பொன்முடி, ராஜ்யசபா எம்பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு காங்கிரஸ் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+