பிரதமர் மோடி மற்றும் ராகுல் Rally Tracker! பேசிய பேச்சுக்குப் பலன் கிடைத்ததா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியும் ராகுல்காந்தியும் பல்வேறு மாநிலங்களில் பேரணியை நடத்தினார்கள். இவர்கள் பேரணி நடத்திய தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன என்பது பற்றிய கணிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 18 ஆவது மக்களவைத் தேர்தல் மொத்தம் 543 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

இதனையடுத்து அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் இன்று காலை 8:30 மணியிலிருந்து எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மந்தமான சூழல்தான் நிலவி வருவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆகவே, மிகக் கவனமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்றும், ஐயங்கள் எழுந்தால் உடனடியாக தகவல் தரப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் உபியில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். காலை தொடங்கியது முதல் அவர் முன்னிலை வகித்து வருகிறார். இடைவில் லேசான பின்னடைவை அவர் பெற்றாலும், தொடர்ந்து அவர் முன்னிலை வகித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நேர்மாறாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் காங் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் உபியில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இருவரும் அவரவர் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அவர் இதுவரை பின்னடைவு என்ற நிலைக்கு வரவே இல்லை.

ஆகவே காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகின்றன.

பாஜக கடந்த 2014 முதல் 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அப்படி இருந்தும் இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி முன்னிலையில்தான் இருந்து இதுவரை இருந்து வருகிறது. ஆகவே, பலம் வாய்ந்த கட்சியாக பாஜக தொடர்ந்து தன்னை தக்கவைத்துள்ளது என்பது நிரூபணமாகி வருகிறது.

இதுவரை 3 அல்லது 4 கட்ட வாக்கு எண்ணிக்கைதான் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 17 கட்ட வாக்கு எண்ணிக்கை உள்ளது. ஆகவே போகப் போக நிலைமை மாறலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த 2024 தேர்தல் களத்தில் ஹைலைட் ஆக பேசப்பட்ட விசயம் ரோடு ஷோக்கள்தான். பிரதமர் மோடி பல மாநிலங்களில் உள்ள பெருநகரங்களில் அவர் ரோடு ஷோ நடத்தினார். பேரணிகளில் பங்கேற்றார். அதன் மூலம் மக்களை அவர் நேரடியாகச் சந்தித்தார்.

இதேபோல் அமித்ஷாவும் பல்வேறு பேரணிகளில் பங்கேற்று கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். இந்த இருவருக்கும் சவால் விடும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பல மாநிலங்களில் பேரணிகளில் பங்கேற்றனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணிகளுக்கு இந்தத் தேர்தலில் நல்ல பலன் கிடைத்துள்ளது. அதற்கான அறிகுறிகள் இந்த வாக்கு எண்ணிக்கையில் தெரியவந்துள்ளது.

அதாவது பிரதமர் மோடி நடத்திய 180 பேரணிகளில் 108 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதாவது இந்தத் தொகுதிகளில் Strike Rate 60% வரை உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து அமித்ஷா பேரணி நடத்திய 137 இடங்களில் 86 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தொகுதிகளில் Strike Rate, அதாவது வெற்றி விகிதாச்சாரம் என்பது 63% இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தலைவர்கள் எப்படி பாஜகவின் வெற்றி முகமாக இருந்து வருகிறார்களோ அதே போல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகமாக இந்தத் தேர்தலில் ஒளிர்ந்தவர்கள் இருவர். அவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்தான் என்று தனியே சொல்லத் தேவையில்லை.

ராகுல் காந்தி பேரணி நடத்திய 62 இடங்களில் 20 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதாவது வெற்றி விகிதாச்சாரம் 32% என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி பங்கேற்ற 43 இடங்களில் பாஜக 21 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இவரது Strike Rate என்பது 49% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றி விகிதாச்சாரங்கள் மாறக் கூடியவைதான். நிரந்தரமானதல்ல. ஆனாலும் இதில் குறைந்த கணிசமான இடங்களை இரு கட்சிகளும் கைப்பற்றலாம் என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+