'ஆபரேஷன் 9' தொகுதிகள்.. பாஜக அண்ணாமலை 'மலை' போல நம்பும் தளபதிகள் யார்? உத்தேச வேட்பாளர்கள் இவர்களா?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு பாஜக சிறப்பு முன்னுரிமையாக 9 தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல் முறையாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளபடியான பாஜகவின் முன்னுரிமை தொகுதிகள் தமிழ்நாட்டில் 9 லோக்சபா தொகுதிகள். கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, வேலுார், கோவை, ஈரோடு, தென்சென்னை, ராமநாதபுரம், நீலகிரி ஆகியவை இந்த 9 தொகுதிகளாக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

2019 தேர்தல் களம்: 2019 லோக்சபா தேர்தலில் இந்த 9 தொகுதிகளில் 5-ல் பாஜக போட்டியிட்டவை. அதிலும் 5 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்கள் 2-வது இடம் பிடித்தவர்கள். ஆகையால் இந்த தொகுதிகளில் போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் பாஜக முன்னுரிமை தருவதில் சிக்கல் இருக்காது. ஆனால் தூத்துக்குடியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கோவையில் போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணன் இருவருமே ஆளுநராகிவிட்டனர். இதனால் இவர்களுக்கு பதில் புதியவர்கள் களமிறக்கப்படலாம்.
பொன்.ராதாகிருஷ்ணன், நயினார், எச்.ராஜா: பாஜகவின் முன்னுரிமை தொகுதிகளான 9 தொகுதிகளில் யார் வேட்பாளர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். இதன்படி கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தொழிலதிபர் மகன் அல்லது சசிகலா புஷ்பா, திருநெல்வேலி அல்லது ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் மீண்டும் எச்.ராஜா ஆகியோருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லோரும் 2-வது இடம்: கடந்த முறை ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், சிவகங்கையில் எச்.ராஜா, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். அப்போது அதிமுகவும் கூட்டணியில் இருந்தது. அதைத் தாண்டி பாஜக வேட்பாளர்கள் எதிர்கொண்டது திமுகவின் கூட்டணி வேட்பாளர்களைத்தான். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிவகங்கையில் காங்கிரஸ், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் பாஜக வேட்பாளர்கள் மோதினர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்.முருகன், குஷ்பு: நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அல்லது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, ஈரோடு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகன், தென்சென்னையில் நடிகை குஷ்பு ஆகியோர் போட்டியிடக் கூடும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலூர்: வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம், 'ரிசர்வ்' செய்து வைத்திருக்கிறார். இதனால்தான் மத்திய அமைச்சர் அமித்ஷா, வேலூர் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அத்துடன் பாஜக கூட்டணியில்தான் தொடர்ந்து நீடிப்போம் எனவும் ஏசி சண்முகம் அதிமுகவுக்கு எதிராக முதல் கூட்டணி கட்சியாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications