தமிழகத்தில் மோடியை களமிறக்கும் பாஜக.. ஆனால் கணக்கு சரியாக வருமா?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடியைப் போட்டியிட வைத்து பாஜக புதுக் கணக்கு போடுகிறது. அது சரியாக வருமா என்றுதான் தெரியவில்லை.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பிரதமர் மோடியைப் போட்டியிட வைத்தால் தனக்கு பெருத்த லாபம் கிடைக்கும் என பாஜக கணக்குப் போடுகிறது. இதனால்தான் அதிரடியாக மோடியை இங்கு களம் இறக்க பாஜக திட்டமிடுகிறது. ஆனால் அதன் கணக்கு சரியாக வருமா என்பது விவாதத்துக்குறியது.
லோக்சபா தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்த முறை தமிழகத்தில் பாஜக அதிக கவனம் செலுத்த முடிவெடுத்து உள்ளது. இதனால் பாஜக மேலிடத் தலைவர்கள் சமீப காலமாகவே அடிக்கடி தமிழகத்தை எட்டிப் பார்த்து வருகிறார்கள்.
குறிப்பாக பிரதமர் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா என்று மதுரைக்குக் கூட்டி வந்தார்கள். இன்று திருப்பூருக்கு வரவைத்துள்ளனர். அடுத்து கன்னியாகுமரிக்கும் அவர் வரவுள்ளார். இதற்குக் காரணம், மோடியை தமிழகத்தில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டிருப்பதே என்று சொல்லப்படுகிறது.

வாரணாசி - வதோதரா
பிரதமர் மோடி கடந்த லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் அவர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதியில் இருந்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றிபெற்ற அவர், வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் 2 தொகுதிகள்
இந்த முறையும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார். ஒரு தொகுதி, உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னொரு தொகுதி தமிழகத்தில் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இங்குதான் பாஜக அதிரடி கணக்கைப் போடத் துடிக்கிறது.

பாஜக போடும் கணக்கு
இந்தியாவிலேயே மோடிக்கு அதிகம் எதிர்ப்பு உள்ள மாநிலம் தமிழகம். அவர் இங்கு வரும்போதெல்லாம் போராட்டம் உச்சகட்டத்தை எட்டுகிறது. கோ பேக் மோடி பிரசாரம் வரலாறு படைக்கிறது. அப்படி இருக்கும்போது மோடியை இங்கு கொண்டு வந்து இறக்க என்ன காரணம்.. அதில்தான் சூட்சுமமம் அடங்கியுள்ளது. மோடியை வைத்து தான் ஆதாயம் அடைய முடிவு செய்துள்ளது பாஜக. காரணம், இதை விட வலிமையான ஆயுதம் அதனிடம் இல்லை என்பதால்.

பாஜக போடும் கணக்கு இதுதான்
தமிழகத்தில் பாஜகவுக்கு ஓரளவுக்கு வாக்கு வங்கி உள்ள பகுதிகள் கன்னியாகுமரி, கோவை போன்றவை. அதிமுக பலத்துடன் இணைந்தால் இங்கு நிச்சயம் வெற்றி பெற முடியும். கன்னியாகுமரியில் கடந்த தேர்தலில் ஜெ அலை அதீதமாக வீசிய போதும் கூட பொன் ராதாகிருஷ்ணன் தனது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றார். எனவே மோடியை வெற்றி பெற வைப்பது கஷ்டமானதல்ல. ஆனால் மோடியை வைத்து குறைந்தது 10 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக திட்டமிடுகிறது.

10 தொகுதிகளில் வெல்ல திடடம்
மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் மட்டுமல்லாமல் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெறும் முனைப்புடன் பாஜகவினர் தீவிரமாக களப் பணியாற்றுவார்கள். மோடி போட்டியிடும் தொகுதிக்கு அருகாமை தொகுதிகளிலும் அந்த அலை பரவும். மோடியே இங்கு வந்து போட்டியிடுகிறார். தமிழகத்தை முக்கியமாக பார்ப்பதால்தான் போட்டியிடுகிறார் என்று மக்களிடையே பிரசாரம் செய்ய முடியும். இப்படி பல கணக்குகளைப் போட்டே மோடியை இங்கு நிறத்த பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது. மோடியை வைத்து தனது கூட்டணிக்கு குறைந்தது 10 தொகுதிகளிலாவது வெற்றியைத் திரட்ட முடியும் என்பது பாஜகவின் கணக்கு.

தோல்வி அடைந்தால்
ஒருவேளை தமிழகத்தில் மோடி போட்டியிட்டு, அந்த ஒரு தொகுதியில் மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால், அது பாஜகவிற்கு பெரிய அவமானமாக அமையும். தேசிய அளவில் மோடியின் தோல்வி மிக முக்கியமான செய்தியாக மாறும். இதனால் பாஜக இந்த ரிஸ்க்கை எடுக்குமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. ஆனால் ரிஸ்க் எடுத்தாவது பாஜகவை கரை சேர்க்க வேண்டும் என்று பாஜக முடிவெடுத்து விட்டால் அதை தடுக்க முடியாது. இதனால்தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார் என்கிறார்கள்.

சாதகத்தை விட பாதகம் நிறைய
இருப்பினும் மோடிக்கு சாதகமான சூழலை விட பாதகமே அதிகம் உள்ளது. மத்திய பாஜக அரசால் தமிழகமே கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. காவிரி டெல்டாவை காலி செய்து விட்டனர். கொங்கு மண்டலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சீர்குலைந்து விட்டது. சிறு தொழில் நசுங்கி விட்டது. பலர் வேலையை இழந்து நடுத்தெருவுக்கு போய் விட்டனர். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சினை உள்ளது. இது போதாதென்று எஸ்விசேகர், எச். ராஜா போன்றவர்களால் பாஜக சம்பாதித்து வைத்துள்ள கெட்டப் பெயர் எக்கச்சக்கம். இதனால் பாஜக திட்டமிடும் கணக்கும் சரியானதா என்று கேள்வியும் எழுந்துள்ளது.
பாஜகவின் ரிஸ்க் முள் மேல் நடப்பது போலத்தான். மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒன்று. பாஜக ரிஸ்க் எடுத்து இறங்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications