Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். தேர்தல் ஆணைய விதிப்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு முன் வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதன்படி லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால, அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரைக்கும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவிற்கு நாடு தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

Lok Sabha Elections 2024 5 Lakhs in Tamil Nadu apply for inclusion in voter list

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 6.18 வாக்காகளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு டிச.9-ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று வரை பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும்.

இவர்கள் பெயர்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் அவர்களுக்கு கிடைக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை தவிர்ந்து ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்கள் காண்பித்து தங்களது வாக்கினை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தலுக்கு பின் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+