Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராயபுரம் மனோ.. ஆற்றல் அசோக்குமார்.. சேலம் விக்னேஷ்.. டிக் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. யார் இவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னையில் அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோவும் தென் சென்னையில் அறிமுகமான வேட்பாளராக ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் சிலர் அறிமுகமானவர்களாக இருந்தாலும் புதுமுக வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. திமுக இன்றைய தினம் வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட உள்ளது.

Lok Sabha Elections 2024 AIADMK Candidate list Rayapuram Mano Aatral Ashok kumar Bio Data

இந்த நிலையில் வழக்கமான வேகத்தோடு அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

வட சென்னை - ராயபுரம் மனோ: வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோ. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராஜினாமா செய்தார். மூப்பனார், வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன். பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், கோபண்ணா ஆகியோருடன் நெருங்கிய நட்பில் இருந்தார் ராயபுரம் மனோ. காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக, அகில இந்திய உறுப்பினராக, மாவட்ட தலைவராக பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார் மனோ. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த ராயபுரம் மனோவிற்கு வடசென்னை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை - ஜெயவர்தன்: தென் சென்னை வேட்பளார் ஜெயவர்த்தன் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். ஜெயலலிதா காலத்திலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர். தன்னுடைய 26-ம் வயதில் முதன்முதலாக எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயவர்தன். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்வியை நிறைவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்ற அறிமுகத்துடன் மூன்றாவது முறையாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் களம் காண்கிறார் ஜெயவர்த்தன்.

ஈரோடு ஆற்றல் அசோக்குமார்: புதுமுக வேட்பாளரான ஆற்றல் அசோக் குமார் 1970 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த பின்னர் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1987-1991 வருடத்தில் மின் பொறியியல் பயின்று பட்டம் பெற்றவர். ஆற்றல் அசோக் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மின் மற்றும் கணினி பொறியியல் எம்எஸ் பட்டம் பெற்றார். பாஜக மாநில ஓபிசி அணியின் துணை தலைவராக, ஆற்றல் அசோக்குமார் பதவி வகித்து வந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனான அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் ஆவார். அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பிய அசோக்குமார், தான் நிறுவனராக உள்ள ஆற்றல் அறக்கட்டளை மூலம், மருத்துவ சிகிச்சை, மலிவு விலை உணவகம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொண்டு வந்தார். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆற்றல் அசோக்குமார் தற்போது ஈரோடு லோக்சபா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

மதுரை: பி.சரவணன்: மதுரை லோக்சபா தொகுதி வேட்பாளர் மருத்துவர் சரவணன் சினிமா துறையில் இருந்து வந்தார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து அதே படத்திலும் இவர் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக செல்லாத நிலையில் அரசியலுக்குள் நுழைந்தார். அரசியலுக்கு வந்து முதலில் மதிமுகவில் இருந்தவர் அதன்பின் பாஜகவிற்கு சென்றார். அங்கிருந்து அப்படியே திமுகவில் இணைந்தார். திமுக பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததால் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சீட் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார். இதனால் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை வடக்கு சட்டசபை தொகுதியில் சரவணன் போட்டியிட சீட் அளிக்கப்பட்டது. பாஜக தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த சரவணனுக்கு தற்போது மதுரை லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் - விக்னேஷ்: அதிமுகவை பொறுத்தவரை சேலம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆகும். கடந்த சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை வென்றது. எனவே சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதிமுகவை பொருத்தவரை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செம்மலை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு படித்த இளைஞர் ஒருவரை நிறுத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மணியின் உறவினரும், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவத்தின் மகனும், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான விக்னேஷ் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்
அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி - வி.ஜெயப்பிரகாஷ்
ஆரணி - ஜி.வி.கஜேந்திரன்
தேனி - நாராயணசாமி
விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
நாமக்கல் - எஸ்.தனிமொழி
கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியை நம்பி அதிமுக கிடையாது. அதேநேரம் கூட்டணி வேண்டாம் என்றும் கூறவில்லை. புதிய அறிமுக வேட்பாளர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள். நாடாளுமன்றத்தில் மக்களுக்காக அழகிய முறையில் குரல் கொடுப்பார்கள்.

தலைமைக் கழகத்தின் மூலமும், மூத்த நிர்வாகிகள் மூலமும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக பலம்வாய்ந்த கட்சி. நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 3வது பெரிய கட்சி. எங்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதை லோக்சபா தேர்தல் முடிவில் பார்க்கமுடியும்.

கடந்த மூன்றாண்டுகாலமாக விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தமிழ்நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. எங்கள் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் மார்ச் 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். முதல்கட்டமாக வரும் மார்ச் 30ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சி லோச்பா தொகுதியில், வரும் மார்ச் 24ஆம் தேதி மாலை 4 மணியளவில், நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோயிலில் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+