மாத்தி யோசி.. தேசிய அளவில் ஸ்டாலின் தந்த ஐடியா.. ஒரே மேடையில் ஏற இருந்த தலைகள்.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு இடையில் இந்திய கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அல்லது பிரம்மாண்ட பொதுக்கூட்டம் டெல்லியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் தற்போது அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

50 நாட்கள் சிறையில் இருந்தபின், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெயிலில் வந்துள்ள அவர் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களின் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில்மேலும் நான்கு சுற்றுகள் நடைபெற உள்ளன. இன்று 4ம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ல் மீதமுள்ள தேர்தல்கள் நடக்க உள்ளன.

Lok Sabha elections 2024 CM Stalin gives an idea to INDIA alliance about grand meeting with Arvind Kejriwal

கெஜ்ரிவால் ரிட்டர்ன்: கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் இரண்டு மாநிலங்கள் டெல்லி மற்றும் பஞ்சாப். இங்கு இருபது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு - முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெறும். இந்த தேர்தல்களுக்கான பிரச்சாரங்களை கெஜ்ரிவால் தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

அமலாக்கதுறை கெஜ்ரிவாலை மார்ச் 21 அன்று கைது செய்தது. பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் கடைசி நாளான ஜூன் 1 ஆம் தேதி வரை தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் வருகை லோக்சபா தேர்தல் களத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவால் வருகை: கெஜ்ரிவால் வருகை காரணமாக இந்தியா கூட்டணி வலிமை அடைந்துள்ளது. அதோடு மோடிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பாக கெஜ்ரிவால் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

கெஜ்ரிவால் விடுதலையாகும் வரை, ஆம் ஆத்மி பிரச்சாரத்தின் கவனம் கெஜ்ரிவாலின் கைது மீதுதான் இருந்தது. ஆம் ஆத்மி பிரச்சாரங்கள் போஸ்டர்களில் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் டெல்லி முதல்வர் இருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. இப்போது ஆம் ஆத்மி தலைவர் வெளியில் இருப்பதால், பிரச்சார வியூகமே மாறி உள்ளது. ஆம் ஆத்மி போஸ்டரில் 'புலி திரும்பி வந்துவிட்டது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவாலின் முதல் ரோட்ஷோ இதுவாகும். கெஜ்ரிவால் வருகை பாஜகவிற்கு சம்மட்டி அடியாக மாறி உள்ளது.

இந்தியா கூட்டணி பிளான்: இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கூட்டணி தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை சந்தித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் இந்திய கூட்டணி தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் கூட்ட வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு இடையில் இவர்களின் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

முன்பு கெஜ்ரிவால் சிறையில் இருந்த காரணத்தால் தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் கூடும் வகையில் கூட்டம் நடத்தப்படவில்லை. கெஜ்ரிவால் உள்ளே இருக்கும் போது கூட்டம் நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் செய்யவில்லை.

இந்த நிலையில்தான தற்போது அவர் வந்த நிலையில் பெரிய பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் முடிவு: ஆனால் ஸ்டாலின் இதில் வேறு ஐடியா கொடுத்துள்ளாராம். பிரச்சாரம் நமக்கு சாதகமாக இருக்கிறது. தேர்தல் நமக்கு சாதகமாக திரும்ப தொடங்கி உள்ளது. இப்போது பொதுக்கூட்டம் பலன் அளிக்காது. களப்பணியே பலன் அளிக்கும்.

தலைவர்கள் முடிந்தவரை தனி தனியாக எல்லா இடங்களையும் கவர் செய்ய வேண்டும். நானும் கூட வடக்கில் பிரச்சாரத்திற்கு வருவேன். ஆனால் திமுக வடக்கில் பிரச்சாரம் செய்தால் சிக்கல் ஆகும். மற்றபடி பொதுக்கூட்டத்தை கடைசி கட்ட தேர்தலுக்கு 2-3 நாட்களுக்கு முன் நடத்தலாம். அதற்கு முன் நடத்தினால் தேர்தல் பணிகள் பெரிய அளவில் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன என ஸ்டாலின் ஐடியா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+