Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனது மனைவிக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத நபர்களை இணைத்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது நகைச்சுவையாக உள்ளது என்று திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக யூ டியூப் வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை குறிப்பிட்டு சசிகாந்த் செந்தில் இந்த போஸ்டை செய்துள்ளார். அதில், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாசிசத்தை எதிர்க்கும் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சில வலதுசாரி இயக்கங்கள் என்னை குறிவைத்து தாக்குகின்றனர். 2019ல் இதே பாசிச சக்திகளை எதிர்த்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்த போது இதே மாதிரியான விமர்சனங்களை எதிர் கொண்டேன்.

Lok Sabha Elections 2024 Sasikanth Senthil explains his position on the video against him

ஆனால் இன்று என்னுடைய மனைவியையும், என்னுடைய குடும்பத்தாரையும் பற்றி உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பும் ஒரு காணொளியை காண நேர்ந்தது. அதில் கூறப்பட்ட செய்திகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. ஒருவருடைய குடும்பத்தினரை பற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி அதில் விளம்பரம் தேடுவது சிலருக்கு வழக்கமாகிவிட்டது. எனது மனைவிக்கு முற்றிலும் அறிமுகமே இல்லாத நபர்களை இணைத்து கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது நகைச்சுவையாக உள்ளது. எத்தனை முயன்றாலும் தமிழகத்தில் முற்போக்கு மற்றும் ஜானநாயக கொள்கைகளை எந்தி பிடிக்கும் திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி தமிழகத்தில் இந்த பாராளுமன்ற தேர்தலில் 40/40 தொகுதிகளிலும் வெல்லப்போவது நிச்சயம்.

சசிகுமார் செந்தில் யார்?: சென்னையைச் சேர்ந்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார்.

Lok Sabha Elections 2024 Sasikanth Senthil explains his position on the video against him

அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது.

பாஜகவிற்கு எதிர்: பாஜகவின் சில கோரிக்கைகளை இவர் கேட்க மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தலையாட்டி பொம்மையாக இல்லமால் இவர் நேர்மையான தலைவராக இருந்துள்ளார். முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.

மோடி: முக்கியமாக பிரதமர் மோடி மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் அப்போது வைத்தார். அங்கே பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் கூறினார்.

இதையடுத்து காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.

என்னென்ன பணி? முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார். இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றது. இன்னொரு பக்கம் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.

இந்த நிலையில்தான் தற்போது திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+