லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டில் திமுக அணி 30- 34 இடங்களை அடிச்சு தூக்கும்- டைம்ஸ் நவ் அதிரடி சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 30 முதல் 34 இடங்களைக் கைப்பற்றும் என Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் தற்போதைய கூட்டணியில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக இருக்கிறது.

Lok Sabha Poll: DMK Alliance to get 30-34 seats in TN- Times Now survey

அதிமுக- பாஜக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் அதிமுக பக்கம் சில கட்சிகளும் பாஜக பக்கம் சில கட்சிகளும் இணையக் கூடும். பாஜக அணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணிகள் இணையவும் வாய்ப்பிருக்கிறது.

அதிமுக அணியில் புரட்சி பாரதம் இடம் பெறும் என அறிவித்துள்ளது. புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக Times Now- ETG Research கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளன.

இதில் கர்நாடகா மாநிலத்தில் மட்டும்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

Lok Sabha Poll: DMK Alliance to get 30-34 seats in TN- Times Now survey

தமிழ்நாட்டு நிலவரம் தொடர்பான Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள்:

திமுக கூட்டணி- 30 முதல் 34 இடங்கள்

திமுக 20 முதல் 24 இடங்கள்

காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்

அதிமுக 4 முதல் 8 இடங்கள்

பாஜக 0 முதல் 1

இதர கட்சிகள் 0-2

Lok Sabha Poll: DMK Alliance to get 30-34 seats in TN- Times Now survey

தமிழ்நாட்டில் கூட்டணிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம்:

இந்தியா கூட்டணி - 57.20%

(அதிமுக பிளஸ்) பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி: 27.80%

இதர கட்சிக 15.00%. இவ்வாறு Times Now- ETG Research கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+