இந்த 5 தொகுதிகள்.. திமுக, பாஜக, அதிமுக எல்லாம் திக்கி திணற போகுது.. தந்தி டிவி சர்வேயில் சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

2024 லோக்சபா தேர்தல் கணிப்புகளை பார்க்கும் முன் 2019 லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற தனி தனி வாக்கு சதவிகிதங்களை பார்க்கலாம்.
திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
திமுக 33.52% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
காங்கிரஸ் 12.61% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக கூட்டணி 30.57% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
அதிமுக 19.39% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாஜக 3.66% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
பாமக 5.36% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
தேமுதிக 2.16% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
நாம் தமிழர் கட்சி 3.90% வாக்கு சதவிகிதங்களை பெற்றது
கருத்து கணிப்பு: லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்டு உள்ளன.
மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும்.
அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது.
பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும்.
இழுபறி நீடிக்கும் இடங்கள் 5
இழுபறி நீடிக்கும் அந்த 5 இடங்கள்:
வேலூர்
திருநெல்வேலி
கோயம்புத்தூர்
கள்ளக்குறிச்சி
பொள்ளாச்சி
ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில்
வேலூர்
திருநெல்வேலி
கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக - பாஜக இடையே இழுபறி நீடிக்கும்.
கள்ளக்குறிச்சி
பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக - திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு சதவிகிதம்:
திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்
பாஜக வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதி : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications