பாஜக ஆர்டர் கொடுத்த மெகா அசைன்மெண்ட்- "இந்தியா" கூட்டணியை டமால் டுமீல் ஆக்கப் போகும் "ரஜினிகாந்த்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் "ஆன்மீக அரசியல்" பேசுகிற நடிகர் ரஜினிகாந்த் திடீரென பரபரப்பாக களமிறக்கிவிடப்பட்டிருக்கிறார். ரஜினிகாந்துக்கு பாஜக கொடுத்த மெகா அசைன்மெண்ட்டே இரண்டுதான்; அதில் ஒன்று "இந்தியா" கூட்டணியை உடைப்பது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணி எல்லாம் உருவாகாது; அப்படியே உருவானாலும் எடுத்த எடுப்பிலேயே உடைந்து தூளாகும் என்பதுதான் பாஜகவின் கணக்காக இருந்தது.

Loksabha Election 2024: Actor Rajinikanth meeting with Akhilesh Yadav for BJP Agenda?

ஆனால் மத்தியில் ஆளும் பாஜகவை ரொம்பவே மிரட்டிக் கொண்டிருக்கிறது "இந்தியா" கூட்டணி. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவழைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பேச வைத்து சாதித்து காட்டியது இந்தியா கூட்டணி. இதனால் இப்போதைக்கு பாஜகவின் மெகா மெகா அரசியல் பணியாக இருப்பதே "இந்தியா" கூட்டணியை கலகலக்க வைப்பதுதானாம்.

சரத்பவார்: "இந்தியா" கூட்டணியில் இருந்து சரத்பவாரை எப்படியாவது வெளியேற்றுவதற்காக பகீரத முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் இடைவிடாமல் சரத்பவாரை சந்தித்து பேசி கலகமூட்ட தீவிரமாக முயற்சிக்கிறார். ஆனாலும் சரத்பவார் இப்போதைக்கு "இந்தியா" கூட்டணியைவிட்டு அசையாமல் குத்து கல்லாக உட்கார்ந்து இருப்பார் என்றே கூறப்படுகிறது.

நிதிஷ்குமார்: அதேபோல பாஜக என்னதான் கதவை மூடிவிட்டதாக கூறிவிட்டாலும் நிதிஷ்குமாரும் இரட்டை நிலையில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த ஐக்கிய ஜனதா தளத்தை கபளீகரம் செய்து காலி செய்வது என்பதுதான் திட்டமாம். இதனால்தான் நிதிஷ்குமார் தாமாகவே முன்வந்து வாஜ்பாய் நினைவிடத்துக்கு போய் அழையா விருந்தாளி போல அஞ்சலி செலுத்தினாராம்.

அகிலேஷ் யாதவ்: சரத்பவார், நிதிஷ்குமார் வரிசையில் அடுத்ததாக அகிலேஷ் யாதவை பாஜக டார்கெட் செய்திருக்கிறதாம். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் பரம எதிரியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இருந்து வருகிறது. அதேநேரத்தில் பல நேரங்களில் பாஜகவுக்கு பக்கபலமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் இருந்திருக்கிறார். அதனால் அகிலேஷ் யாதவ், முழு வீச்சில் பாஜக எதிர்ப்பாளர் என்பதெல்லாம் கணக்கில் கிடையாதுதான். ஆகையால் அகிலேஷ் யாதவ் எனும் மாங்காயை அடித்து வீழ்த்த ரஜினிகாந்த் எனும் கல்லை வீசிப் பார்த்ததாம் பாஜக. கடந்த 9 ஆண்டுகளாகா தமக்கும் அகிலேஷ் யாதவுக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது என ரஜினிகாந்த் தாமே தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் ஜினிகாந்த்- அகிலேஷ் யாதவ் சந்திப்பு என்பதே "இந்தியா" கூட்டணியில் உரிய நேரத்தில் அகிலேஷ் யாதவை கழற்றிவிட வைக்கும் ஒரு முயற்சிதான் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+