சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லும் அளவுக்கு இல்லை.. ஓரளவுக்கு திருப்தி.. கமல் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவுக்கு திருப்திகரமாக உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களை தொடர்ந்து நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாக கூறினார்.

LokSabha Elections 2019: Election Commissions activity is not enough says Kamal Haasan

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஓரளவுக்கு திருப்திகரமாக உள்ளது என்று கூறிய அவர், பாரபட்சமின்றி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நான் இறங்கி அடிப்படி போல், தேர்தல் ஆணையமும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக, இளைஞர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் நாடு நன்றாக இருக்க, மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு வாக்களிக்குமாறும் கூறினார்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முதல் ஓட்டு இன்றே பதிவாகியாச்சு.. எங்கே தெரியுமா? 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான முதல் ஓட்டு இன்றே பதிவாகியாச்சு.. எங்கே தெரியுமா?

வாக்களிக்கச் செல்லும் போது உங்களது மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும். ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார். எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல என்றும் ஆனால், திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்த கமல்ஹாசன், இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும் என்றார்.

English summary
Kamalhassan Said That Election Commission's activity is not enough
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X