அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல வருட ஏக்கம்.. எம்டிசி எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுப்பு வழங்குவதில் தானியங்கி முறை அமலுக்கு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். இந்த செயலி மூலம் அவசரமான சூழலில், விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதிகபட்சம் இரண்டு நாட்கள் இந்த ஆப் தானியங்கி முறையில் அப்ருவல் தந்துவிடும்.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை போல், அரசு மாநகர போக்குவரத்து கழகங்களில் வேலை செய்வோர், நினைத்தபோது எல்லாம் எளிதாக விடுமுறை எடுக்க முடியாது. சூப்பர்வைசரிடம் முன்கூட்டியே தெரிவித்து தான் விடுப்பு எடுக்க முடியும். அதேநேரம் அந்தவிடுப்பை அவர் ஏற்காமல் நிராகரிக்கவும் உரிமை உள்ளது.

பலர் முக்கியமான காரணங்களுக்கு விடுமுறை கேட்டாலும், கிடைப்பது என்பது எளிதாக நடப்பது இல்லை. போலீஸ் போல் தான் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள். அவசர சூழலில் தங்கள் உடன் பணியாற்றுவோரின் ஒத்துழைப்புடன் மட்டுமே விடுப்பு எடுக்க முடியும். அந்த விடுப்பும் மிகமிக எமர்ஜென்சி என்ற முறையில் தான் கிடைக்கும். இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுப்பு வழங்குவதில் தானியங்கி முறை அமலுக்கு கொண்டுவரப்படுகிறது.
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்கிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர் செயலி (ஆப்) கடந்த பிப்ரவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை மேலும் மேம்படுத்தும் வகையில், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு விடுப்பு வழங்குவதை எளிதாக்கிட, தானியங்கி ஒப்புதல் (ஆட்டோ அப்ரூவல்) முறை மூலம் விடுப்பு வழங்கும் வசதி வருகிற நவம்பர் மாதம் முதல் இச்செயலியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அதன்படி, டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் விடுப்பு கோரும் நாட்களுக்கு முந்தைய மாதத்தில் குறைந்தது 24 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக 6 சதவீத விடுப்பு தானியங்கி ஒப்புதல் அவர்களுக்கு அங்கீகரிக்கப்படும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுப்பு வழங்கப்படும்.
ஒரு மாதத்தில், அதிகபட்சமாக 2 நாட்கள் வரை இம்முறையில் விடுப்பு அங்கீகரிக்கப்படும். தானியங்கி ஒப்புதல் (ஆட்டோ அப்ரூவல்) மூலம் வழங்கப்படும் விடுப்பு சி.எல். ஆக கணக்கிடப்படும். சி.எல். இல்லாத நிலையில் தானியங்கி ஒப்புதல் (ஆட்டோ அப்ரூவல்) முறை மூலம் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய இயலாது.இம்முறையில் விடுப்பு அங்கீகரிக்கப்படாவிட்டால் மேல்முறையீடு செய்யும் வசதியும் இந்த செயலியில் உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications