Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களத்திர தோஷமா?..முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பாருங்கள்..கல்யாண யோகம் கை கூடி வரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: தமிழகத்தில் உள்ள அறுபடை வீடு முருகன் ஆலயங்களிலும் இன்றைய தினம் முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள். திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளாக இன்று பிரபல முருகன் ஆலயங்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சிலருக்கு திருமணத்தில் தடை ஏற்படும். எத்தனை வரன் பார்த்தாலும் அமையவே அமையாது. காரணம் பிறப்பு ஜாதகத்தில் தோஷம் ஏற்படும் வகையில் கிரகங்களின் சஞ்சாரம் இருக்கும். செவ்வாய் தோஷம் மட்டுமல்ல களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், ராகு கேது தோஷம் என பல அமைப்புகள் திருமண தடையை ஏற்படுத்தும். ஜாதகத்தில் உள்ள தோஷங்களினால் திருமணம் நடைபெறாமல் உள்ளவர்கள் கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பார்த்தாலே கல்யாண வரம் கைகூடி வரும்.

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரத்தோடு முடிந்து விடுவதில்லை. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. நேற்றைய தினம் சூரசம்ஹாரம் நடந்து முடிந்த நிலையில் இன்று நடைபெற்ற முருகன் தெய்வானை திருமணத்தை ஏராளமானோர் கண் குளிர தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாகப் கொண்டாடப்படுகிறது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட சஷ்டி திருவிழா, சூரசம்கார நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். இதன் முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாணம் வெகு விமர்சையாக பழனி மலைக் கோயிலில் நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அருள்மிகு சண்முகர்-வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழா 7ஆம் நாளான இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இன்று மாலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் உள்ள முகத்துக்குமாரசாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் திருக்கல்யாணம்

திருச்செந்தூர் திருக்கல்யாணம்

சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்து நடைபெறும் திருக்கல்யாணம் சிறப்பு வாய்ந்தது. காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருந்தார். மாலையில் மாப்பிள்ளை சாமியான குமரவிடங்கர் முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு தோள்மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்கிறது. மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும் விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வார்கள்.

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்

ஐந்தாம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறாது அதற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இன்று காலையில் ஏராளமானோர் சீர் வரிசை தட்டுடன் வந்து திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நான்காம் படை வீடான சுவாமிமலையில் இன்றிரவு முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

களத்திர தோஷம் நீங்கும்

களத்திர தோஷம் நீங்கும்

களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். அதே போல செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தாலும் திருமண தடை ஏற்படும். திருமண தடை அமைப்பு உள்ளவர்கள் இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டாலே திருக்கல்யாணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+