காலையிலேயே சோகம்.. பலியான விஜயின் தவெக தொண்டர்.. சென்னையில் லாரி மோதி விபத்து
சென்னை: விக்கிரவாண்டியின் வி சாலையில் நடக்கும் நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநில மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கினர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்னொருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு என்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு மாலை 3.15 மணி முதல் 4 மணிக்குள் நடிகர் விஜய் வருகிறார்.

அதன்பிறகு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் ரிமோட் மூலம் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாடு தொடங்க உள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டில் பேசி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.
நடிகர் விஜயின் இந்த முதல் அரசியல் மாநாடு தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேச போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையே தான் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாடு நடக்கும் இடத்துக்கு குவிந்து வருகின்றனர். இன்று காலையில் அதிகமான வாகனங்களில் தொண்டர்கள் படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். அதாவது சென்னையில் இருந்து 2 தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டனர். அவர்கள் கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் இருந்தது. இந்த இருசக்கர வாகனம் சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே வந்தபோது லாரி ஒன்று மோதியுள்ளது.
இதில் இருசக்கர வாகனங்களில் இருந்து 2 தொண்டர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் இன்னொருவரும் படுகாயமடைந்தார். இதையடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போக்குவரத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications