டிச.,9ல் தொடங்க இருந்த லாரி வேலைநிறுத்தம் வாபஸ்.. அமைச்சர் சிவசங்கர் கொடுத்த உறுதியால் ஒத்திவைப்பு
சென்னை: வாகனங்களின் எப்சி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் டிசம்பர் 9 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால் காய்கறி, கியாஸ் உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடுத்த வாக்குறுதியால் இந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் லாரிகளின் எப்.சி. (FC - Fitness Certificate) கட்டணத்தை சமீபத்தில் அதிரடியாக உயர்த்தியது. ரூ.850ல் இருந்த எப்சி கட்டணத்தை ரூ.33,040 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டண உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான், எப்சி கட்டண உயர்வை கண்டித்து டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், தான் எப்சி கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று உறுதியளித்தார். இதையடுத்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்ததை திரும்ப பெற்றுள்ளனர். மறுஅறிவிப்பு வரும் வரை வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வழக்கம்போல் டிசம்பர் 9 ம் தேதி முதல் தமிழகத்தில் லாரிகள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications