Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ,1,368 கோடி! No 1 இடத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின்! புல்வாமா தாக்குதல் பின் வந்த நன்கொடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ,1,368 கோடி நிதி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்று கடந்த சில தினங்கள் முன்னதாக அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது.

Lottery king Santiago Martin No 1 bond buyer

எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க் கிழமை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வங்கிக்கு கெடு விதித்திருந்தது.

அதன்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு ஆவணங்களையும் எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அந்த விவரங்கள் படி நாட்டிலேயே அதிக நிதியை பாஜக பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

Lottery king Santiago Martin No 1 bond buyer

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலான விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அதில் ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடி வரையான மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்த நிறுவனங்கள் எவை? அதை வழங்கிய தனிநபர்களின் பெயர்கள் என்ன? அந்த நிதியைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பெயர்கள் என்ன?, பெறப்பட்ட தொகை பற்றிய தகவல்கள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலின் படி தேர்தல் பத்திரங்களைக் கொடுத்து பணமாக மாற்றிய கட்சிகளின் பட்டியலில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Lottery king Santiago Martin No 1 bond buyer

குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,பாரத் ராஷ்டிரீய சமிதி, தேசியவாத காங்கிரஸ், திமுக, அதிமுக,மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த நிதியைப் பல நிறுவனங்களிடம் இருந்து இந்தக் கட்சிகள் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்களின் பெயர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், ஏர்டெல், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ், வேதாந்தா, நவயுகா, ஐடிசி, பிரமல் எண்டர்பிரைசைஸ், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், பிவிஆர் சினிமாஸ், நாட்கோ பார்மா, சன் பார்மா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Lottery king Santiago Martin No 1 bond buyer

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளன. கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மாராட்டினுக்குச் சொந்தமான future gaming and hotel services private limited நிறுவனம்தான் முதலிடம் பிடித்துள்ளது.

அவர் கிட்டத்தட்ட ரூ,1,368 கோடி கொட்டிக் கொடுத்துள்ளார். அதைப்போல் மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாக வழங்கி உள்ளது. Qwik supply chain pvt ltd என்ற நிறுவனம் ரூ.410 கோடியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா ரூ. 400 கோடியையும் Haldia energy limited நிறுவனம் ரூ.377 கோடியையும் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 247 கோடியையும் நிதியாக வங்கி உள்ளது அம்பலமாகி உள்ளது.

Lottery king Santiago Martin No 1 bond buyer

இதை எல்லாம் கடந்து பாகிஸ்தானின் மின்சார உற்பத்தி நிறுவமனானம் ஒன்றும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. புல்வமா தாக்குதலுக்குப் பின் 4 நாள்கள் கழித்து இந்த நிறுவனம் நன்கொடை வழங்கி இருக்கிறது என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது வரை எந்த நிறுவனங்கள் பணத்தை அளித்தன என்பது பற்றிய விவரங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. இன்னும் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நிதியை அளித்துள்ளது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவை வெளிவந்தால், இந்திய அரசியல் பெரும் புயலைக் கிளப்பும் என்பது உறுதி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்தத் தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் வெளியானது குறித்து சில சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.

Lottery king Santiago Martin No 1 bond buyer

அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் சொந்தமான இடங்களில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதன்பின்னர் என்ன நடந்தது என்பதற்குத்தான் பதில் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிதிகளைப் பெற்ற கட்சிகளின் பெயர்களும் விரைவில் வெளியாகும் பட்சத்தில், அமலாக்கத்துறை சோதனைக்குப் பின்னர் எந்தெந்த கட்சிகள் ஆளும் கட்சிக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளன? அதன் மதிப்பு எவ்வளவு என்பன தெரியவரும் போது, அது மிகப் பெரிய சர்ச்சையாக மக்களவைத் தேர்தல் களத்தில் வெடிக்கக் கூடும்.

அதனால் பல கட்சிகளின் வெற்றி பாதிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+