திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய லாட்டரி மார்ட்டின்! தேர்தல் பத்திர விவகாரத்தில் புது தகவல்
சென்னை: தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு ரூ.656.5 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் ரூ.509 கோடியை லாட்டரி மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் வழங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திமுகவுக்கு சன்நெட்வொர்க் உள்பட பிற நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை பற்றிய முழுதகவலும் இப்போது தெரியவந்துள்ளது.
தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கக்கூடாது என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 2019 முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரை தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை, நன்கொடை வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எஸ்பிஐ வழங்கும் தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே இருந்தன.
தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினர் என்பது தெரியாமல் போனது. எஸ்பிஐயின் இந்த செயலை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் கண்டித்ததோடு, தவறு நடந்தது தொடர்பாக நாளைக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே தான் 2018 முதல் தேர்தல் பத்திரங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு 2018 முதல் 2019 ஏப்ரல் 12ம் தேதி வரையிலான தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ரூ.656 கோடி நன்கொடை: அதில் திமுகவுக்கு நன்கொடை வழங்கியவர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி மார்ட்டின் யார்: லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் நிர்வாக இயக்குனராக உள்ள ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது. ரூ.1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்துள்ளார். இந்த லாட்டரி மார்ட்டின் கடந்த பணமோசடி வழக்கில் சிக்கினார். மேலும் மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியிருந்தது.
மேகா இன்ஜினியரிங்: லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தை தொடர்ந்து திமுகவுக்கு அதிக நிதியை மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.105 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மும்பை புல்லட் ரயில் நிலையத் திட்டத்தைதிற்கான ஒப்பந்தத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியை வழங்கிய தனியார் நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் லாட்டரி மார்ட்டின் நிறுவனம் உள்ள நிலையில் ரூ.980 கோடி நன்கொடைகளுடன் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் உள்ளது.
சன்நெட்வொர்க்: இந்த பட்டியலில் 3வது இடத்தில் ரூ.14 கோடி நன்கொடையுடன் இந்தியா சிமெண்ட்சும், 4வது இடத்தில் சன்நெட்வொர்க் ரூ.10 கோடியை வழங்கி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திரிவேனி நிறுவனம் ரூ.8 கோடியும், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.5 கோடி, ஐஆர்பி ரூ.2 கோடி, எம்எம்டபிள்யூ. ரூ.1.5 கோடி, அப்போலோ ரூ.1 கோடி, பிர்லா ரூ.1 கோடி வழங்கி உள்ளது.
ஆண்டு வாரியாக: இந்த நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையால் 2019-20ம் ஆண்டில் திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ.45.5 கோடி கிடைத்துள்ளது. அதன்பிறகு 2020-21ம் ஆண்டில் ரூ.80 கோடி கிடைத்துள்ளது. அதன்பிறகு ஆளும் கட்சியாக திமுக மாறிய நிலையில் நன்கொடை அளவு கிடுகிடுவென அதிகரித்தது. 2021-2022ல் ரூ.306 கோடி, 2022-23ம் ஆண்டில் ரூ.285 கோடி, 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை ரூ.40 கோடி என மொத்தம் ரூ.656.5 கோடியை திமுக தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications