மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களுடன் ஜோடி சேர்ந்தால் கல்யாண வாழ்க்கை இனிக்கும் தெரியுமா
ராசி பார்த்து காதலிக்க முடியாதுதான் என்றாலும் நமக்கு ராசியான ஜோடியை பார்த்து காதலித்தால் அந்த லவ் சக்சஸ் ஆவதோடு அந்த திருமண பந்தமும் பல ஆண்டுகள் நிலைத்து நிறும்.
சென்னை: திருமணம் என்பது இரு மனங்கள் இணையக்கூடிய நிகழ்வுதான். சிலருடைய திருமண வாழ்க்கை மட்டுமே வெற்றிகரமானதாக இருக்கிறது. பலரது வாழ்க்கை சண்டை சச்சரவு என தினம் தினம் போர்க்களமாகவே இருக்கிறது. கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனில் சரியான ராசி பார்த்து ஜோடி சேர வேண்டும். எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான மன வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், காற்று ராசிகள், நில ராசிகள் என நான்கு வகை தத்துவத்தில் ராசிகள் இருக்கின்றன. இந்த ராசிகள் சரியான ராசி பார்த்து இணைய வேண்டும். சரியான ராசியோடு ஜோடி சேராவிட்டால் திருமண வாழ்க்கையில் சண்டைகள் அதிகரிக்கும் அந்த மண வாழ்க்கை பிரிவு வரை கொண்ட போய் விட்டு விடும்.
மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு. மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.

மேஷம் கடகம்
மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள்.
கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். நெருப்பான மேஷ ராசியினாரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்களாம்.

மேஷம் மற்றும் கும்பம்
மேஷ ராசி அதிபதி செவ்வாய். ரத்தத்தின் அதிபதி எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும் இவர்கள் போர் குணம் கொண்டவர்கள். உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம். கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். பொறுமைசாலிகள். ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.

ரிஷபம் விருச்சிகம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் ரிஷபம் ராசிக்காரர்கள். ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு விருச்சிக ராசிகாரர்களுடன் திருமண வாழ்க்கை அமையும். ரிஷபம் நில ராசி, விருச்சிகம் நீர் ராசி எனவே நீரும் நிலமும் இணைந்து இல்லறத்தில் காதல் கெமிஸ்ட்ரி அதிகரிக்கும்.

ரிஷபம் மற்றும் மகரம்
ரிஷப ராசி அதிபதி சுக்கிரன், மகர ராசி அதிபதி சனி. சுக்கிரனும் சனியும் நட்பானவர்கள் நில ராசிக்காரர்கள் இருவரின் குணாதிசயங்களும் ஒன்றாக இருப்பதால் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும் கல்யாண வாழ்க்கை ருசிக்கும்.

மிதுனம் மற்றும் துலாம்
மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். மிதுன ராசியினரின் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள். துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி துலாம் ராசியினர் எதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் இணைவதால் வெற்றிகரமான மண வாழ்க்கையாக அமையும்.

சிம்மம் மற்றும் துலாம்
சிம்ம ராசிக்கார அதிபதி சூரியன். நெருப்பு ராசியான சிம்மத்தில் பிறந்தவர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஆதிக்கமும் செலுத்தக்கூடியவர்கள். துலாம் ராசியினர் காற்று ராசிக்காரர்கள். சமாதானத்தை விரும்புபவர். காதலை விரும்புபவர்கள். இந்த இரண்டு ராசிகள் இணைந்தால் மனம் ஒத்த தம்பதிகளாக ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.

மிதுனம் கடகம்
புதனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள் தங்களுடைய துணையை அளவுக்கு அதிகமாக விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்கள் மிகவும் பொறுமையானவர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடகம் ராசிக்காரர்களுக்கும் காதல் புரிந்துணர்வு அபரிமிதமாக இருக்கும்.

கன்னி விருச்சிகம்
கன்னி ராசி உள்ளவர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசி உள்ள வாழ்க்கை துணைகள் பொருத்தமாக இருப்பார்கள். கன்னி ராசி நில ராசி மகரம் ராசி நில ராசி, விருச்சிகம் நீர் ராசி. இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும்.

மீனம் மற்றும் கடகம்
மீன ராசி அதிபதி குரு. கடக ராசி அதிபதி சந்திரன். இந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் ஒத்த குணங்கள் அதிகம் இருப்பதால் காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்துப்போகும். திருமணம் செய்து கொண்டால் ஒற்றுமையாக இருப்பார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications