ஶ்ரீபெரும்புதூரில் திருமணத்தை மீறிய காதல் அம்பலம்.. எந்த குழந்தைகளும் தாயை பார்க்ககூடாத கோலம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரியங்காவுக்கு 28 வயது ஆகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே திருமணத்தை மீறி உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த திருமணத்தை மீறிய உறவால் அந்த பெண் இன்று உயிருடன் இல்லை.. அம்மாவை இழந்த இரு குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவருடைய மனைவி பிரியங்காவுக்கு 28 வயது ஆகிறது. இவர்களுக்கு 7 வயது பெண் குழந்தையும், 5 வயது ஆண் குழந்தையும் உள்ளார்கள். அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான முருகன் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே திருமணத்தை மீறி உறவில் இருந்து வந்துள்ளனர்.

திருமணத்தை மீறிய காதல்
இந்த விஷயம் பிரியங்காவின் கணவர் கார்த்திக்கும், முருகனின் மனைவி ஜோதிக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், கார்த்தி மற்றும் ஜோதி இணைந்து பிரியங்காவை கண்டித்து அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
தவிக்கும் குழந்தைகள்
தகவல் அறிந்த சோமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது செயலால் இரண்டு இளம் குழந்தைகளை தாயின்றி தவிக்க விட்டுச் சென்ற இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் எடுத்த முடிவு
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதாகும் அருண்குமா கோடம்பாக்கத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான 30 வயதாகும் அபிநயா என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் அபிநயா நடத்தையில், அருண்குமார் சந்தேகமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று அருண்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த அபிநயா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அபிநயா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தாம்பரம் போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், அபிநயா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அபிநயாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அபிநயாவுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications