காதல் ஜோடியின் அட்டூழியம்.. யாருமில்லாத வீடுகளில் உள்ளே நுழைந்து.. அதிர்ந்த போலீஸ்..!
உறவினர் வீடுகளில் திருடிய காதல் ஜோடி கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை: திருட்டில் இது ஒரு தனி ரகம்.. புது ரகம்.. கொள்ளை அடிப்பதில்கூட ஒரு பாலிசியை கடைப்பிடித்து வந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதிஜெகதீஷ் பாண்டியன் - ரேவதி. இவர்களது வீட்டில் கடந்த 21-ந்தேதி 4 பவுன் நகை காணாமல் போனதாக வளசரவாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 பேர் சிக்கினர். அவர்கள் சர்வசாதாரணமாக ரேவதியின் வீட்டுக்குள் நுழைந்து, வெளியே வருவதும் தெரிந்தது.
இந்த வீடியோவை ரேவதி பார்த்ததுமே "அந்த பையன் என் சொந்தக்கார பையன் கார்த்திக்தான்" என்று சொன்னார். அவர்கள் காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது. கார்த்திக் - நித்யா என்ற காதலர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்குமே வயது 24 ஆகிறது.
அது மட்டுமில்லை.. கொஞ்ச நாளைக்கு முன்பு ரேவதி வீட்டுக்கு கார்த்திக் வந்து போயுள்ளார். இவர்கள் வெளியில் செல்லும்போது, வீட்டை பூட்டிவிட்டு சுவர் ஓரமாக சாவியை வைத்துவிட்டு போவதை கவனித்துள்ளார். இப்படி நோட்டமிட்டுதான், வீடுகளின் பூட்டை திறந்து நகை, பணத்தை இந்த காதல் ஜோடி திருடி வந்துள்ளது.
இருவரும் என்ஜினீயரிங் படித்துள்ளனர்.. ஒரே காலஜில் படித்துள்ளனர்.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தும் வருகின்றனர்.. ஆனால் வருமானம் போதவில்லையாம்.. அதனால்தான் திருடுவது என முடிவு செய்துள்ளனர். அதிலும் சொந்தக்காரர் வீடுகளாக பார்த்துதான் இவர்கள் திருடுவார்களாம்.
வெளியில் திருடினால் மாட்டி கொள்ள வாய்ப்பு என்பதால்தான் இந்த பாலிசியை கடைபிடித்து வந்துள்ளனர். இதை தவிர டூப்ளிக்கேட் சாவியை ரெடி செய்து மற்ற சொந்தக்காரர்கள் வீடுகளிலும் அவர்கள் இல்லாத சமயங்களில் திருடி வந்துள்ளனர். இப்படி திருடியே இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.
பெரிய பணக்காரர் ஆன பிறகு இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவும் செய்து வைத்திருந்தார்களாம்.. இப்போது 4 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் இந்த அபூர்வ ஜோடியையும் உள்ளே தூக்கி வைத்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications