LPG Cylinder Price: வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! சென்னையில் ரூ.5.50 கூடுதல்!
சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான LPG கேஸ் சிலிண்டர் விலை மார்ச் 1 ஆம் தேதியான இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 5.50 உயர்ந்து ரூ.1,965 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1,959.50 ஆக இருந்தது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகளில் தாக்கம் ஏற்படும் என்றும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications