ஆதார்+ கைரேகை.. இல்லாவிட்டால் சமையல் கேஸ் சிலிண்டர் கனெக்சன் ரத்து? திடீரென வந்த எஸ்எம்எஸ்
சென்னை: மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. இது தொடர்பாக எஸ்எம்எஸ் ஒன்று பாரத் கேஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவசமாககேஸ் சிலிண்டா் இணைப்பு வழங்க வேண்டும் என்று இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவமாக கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 41 லட்சம் பேர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களோடு சேர்த்து தமிழகத்தில் 2.33 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு மானியத்தில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் கிடைக்கும். உதாரணமாக தற்போது சிலிண்டர் மற்றவர்களுக்கு 800 ரூபாய் என்றால், உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு வெறும் 500 ரூபாய் அளவிற்கு தான் சிலிண்டர் தரப்படுகிறது.

சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு வினியோகம் செய்து வருகின்றன. இதுதவிர அதானிக்கு சொந்தமான டோட்டல் கேஸ், ஐநாக்ஸ் எல்என்ஜி உள்பட சில தனியார் நிறுவனங்களும் சிலிண்டர் வினியோகம் செய்கின்றன.
இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டா் இணைப்பை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வேலைகள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது... இதற்காக வாடிக்கையாளரின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணியை நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்கின்றன. பொதுமக்கள் சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியத்தொகை செலுத்தப்படுகிறது. 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், இலவசகேஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் 300 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, இலவச கேஸ் பயனாளிகளுக்கு மட்டும் முதலில் கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது, அனைத்து வாடிக்கையாளருக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது கேஸ் ஏஜென்சிகளில், கைரேகை மற்றும் முக பதிவு வாயிலாக, வாடிக்கையாளரின் சரிபார்ப்பு நடந்து வருகிறது. ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு, டெலிவரி ஊழியர்களின் செல்போன் செயலி மூலம், முக பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மே 31ம் தேதிக்குள் கேஸ் ஏஜென்சிக்கு வந்து ஆதார் மற்றும் கைரேகை வைக்காவிட்டால் எல்பிஜி கனெக்சன் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் ஒன்று நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் கைரேகை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications