கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?
சென்னை: தமிழகத்தில் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது சமையல் கேஸ் சிலிண்டர் செலவாகும்.. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன.. இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளதால், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான கேஸ் சிலிண்டர்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன..
இப்போது நிலவும் சர்வதேச அரசியல் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, வணிக ரீதியான சிலிண்டர்களின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது..

ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்புகள் அல்லது போக்குவரத்து செலவு மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, அதன் தாக்கம் நேரடியாகச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் பிரதிபலிக்கும்.. குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகங்கள் பயன்படுத்தும் 19 கிலோ சிலிண்டர் விலை உயர்ந்தால், அது உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்பதால் பொதுமக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்..
வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு ஏதேனும் சிறப்பு மானியங்களை அறிவிக்குமா என்பது ஏப்ரல் 1-ம் தேதி காலைதான் அதிகாரப்பூர்வமாகத் தெரியும்..
அதேபோல், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வர உள்ளன.. உங்கள் சிலிண்டர் இணைப்பில் ஆதார் நம்பர், KYC விபரங்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த மார்ச் 31-க்குள் உறுதி செய்து கொள்வது அவசியம்.
ஒருவேளை விபரங்கள் சரியாக இல்லாவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் மானியத் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வருவதில் சிக்கல் ஏற்படலாம்.. பல இடங்களில் போலி இணைப்புகளை நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால், உண்மையான கஸ்டமர்கள் தங்கள் ஆவணங்களைச் சரிபார்ப்பது நல்லது..
சமையல் கேஸ் இணைப்புடன் செல்போன் நம்பரை இணைத்திருப்பவர்களுக்கு, இனி சிலிண்டர் புக் செய்தவுடன் அதன் இப்போதைய விலை மற்றும் டெலிவரி விபரங்கள் இன்னும் துல்லியமாக மெசேஜ் மூலம் அனுப்பப்படும்.
ஏப்ரல் 1 முதல் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்குக் கூடுதலாகப் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன.. விலையில் மாற்றம் வரும்போது, பில்லில் உள்ள சரியான தொகையை மட்டுமே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.. ஒருவேளை கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் புகார் எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்..
மொத்தத்தில், இந்த ஏப்ரல் மாதத் தொடக்கம் இல்லத்தரசிகளின் சமையலறை பட்ஜெட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. விலை குறைந்தால் அது கோடை கால கொண்டாட்டங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும்.
மாறாக விலை உயர்ந்தால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.. எனவே, மார்ச் இறுதிக்குள் உங்கள் கேஸ் சிலிண்டரை முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது, ஒருவேளை ஏப்ரல் 1-ல் விலை உயர்ந்தால் அதிலிருந்து தப்பிக்க உதவும் ஒரு எளிய வழியாகும்.. இந்தத் தகவலை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே பகிருங்கள், அவர்களும் தங்கள் பட்ஜெட்டைத் திட்டமிட இது உதவியாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications