இந்தியாவில் ஒரு வீட்டில் அதிகபட்சம் எத்தனை சிலிண்டர் வைத்துக் கொள்ளலாம்.. ரூல்ஸ் என்ன?
சென்னை: ஈரான் - அமெரிக்கா போரால் மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பலரும் அவசர அவசரமாக புக்கிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள விதிகளின் படி அதிகபட்சம் எத்தனை சிலிண்டர்கள் வீட்டில் வைத்து இருக்க முடியும் என்பது குறித்த விதிகளை பார்க்கலாம்
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக வளைகுடாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க சிலிண்டர் தட்டுப்பாடு
அதேபோல ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு சமையல் சிலிண்டர்களுக்கான புக்கிங் கால அளவு 25 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பது இல்லை என்று ஹோட்டல்கள் புகார் கூறுகின்றன.
வணிக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகளில் உணவு பண்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல ஹோட்டல்களில் உணவுகளின் விலை ஏற்றப்பட்டு இருக்கின்றன. ஹோட்டல்களின் சைடிஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்கவும் பதுக்கலை தடுக்கவும் எஸ்மா சட்டத்தையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
எத்தனை சிலிண்டர்கள் வீட்டில் வைக்கலாம்
இந்த சட்டத்தின் படி பதுக்கலில் ஈடுபட்டல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சரி இங்கே அப்படியானால், வீட்டில் அதிகபட்சம் எத்தனை சிலிண்டர்கள் ஒருவர் வைத்துக்கொள்ளலாம் என்ற கேள்வி எழலாம். அது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தற்போதைய விதிகளின்படி, வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) நுகர்வோருக்கு ஒரு நிதியாண்டில் 14.2 கிலோ எடையுடைய 12 மானிய சிலிண்டர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சிலிண்டர்கள் அரசின் மானிய திட்டங்களின் கீழ் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. சிறிய சிலிண்டர்களை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு, ஒரு நிதியாண்டில் 5 கிலோ எடையுடைய 34 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 2 சிலிண்டர்கள்
பொதுவாக, மானியத்தின் கீழ் நுகர்வோர் ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டும் முன்பதிவு செய்ய முடியும். ஆனால், மானிய அளவைத் தாண்டியும் வீட்டு பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர்களை சந்தை விலையில் (மானியம் இல்லாமல்) முன்பதிவு செய்து பெறவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால், 14.2 கிலோ எடையுடைய 12 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கின்றன. அதற்கு மேலாக, இந்தியாவில் வீட்டு நுகர்வோர் ஒரு நிதியாண்டில் மொத்தமாக 15 சிலிண்டர்கள் வரை முன்பதிவு செய்ய முடியும்.
இதன் அர்த்தம் என்னவென்றால், மானிய சிலிண்டர் 12 போக, மேலும் 3 சிலிண்டர்களை மானியம் இல்லாத சந்தை விலையில் வாங்கலாம். மேலும், சிலிண்டர்கள் குவிப்பு மற்றும் கள்ளச் சந்தையைத் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு முன்பதிவுகளுக்கிடையில் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் 2 சிலிண்டர்கள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
வீட்டில் எத்தனை LPG சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்?
எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றும் பாதுகாப்பு மற்றும் பெட்ரோலியம் விதிகளின் படி, வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பொதுவாக ஒரே நேரத்தில் வீட்டில் அதிகபட்சம் 2 சிலிண்டர்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி உள்ளது.
* 1 சிலிண்டர் பயன்படுத்தப்படுவது (in use).
* மற்றொரு சிலிண்டர் கையிருப்பாக (spare / reserve)
ஆனால், வணிக பயன்பாட்டிற்காக அதிகபட்சம் 100 கிலோ வரை சிலிண்டர் வைக்க அனுமதி உள்ளது. "வெடிபொருள் துறை விதிகளின்படி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத சிலிண்டர்களில் வெடிபொருள் உரிமம் இல்லாமல் 100 கிலோ எல்.பி.ஜி சேமித்து வைக்கலாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications