வீட்டு கேஸ் சிலிண்டர்.. அட வந்தாச்சு சிலிண்டர் "அயர்ன் பாக்ஸ்".. இனி "வெளுத்துக் கட்டுங்க.. சபாஷ்
சென்னை: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், எல்பிஜி நிறுவனம் முக்கிய அதிரடியை கையில் எடுத்துள்ளது.
"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

யோஜனா: இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும்.
தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
இந்நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் சேவை, அடுத்தக்கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனமமானது, குறைந்த செலவில், அதிக பயன்களை தரக்கூடிய LPG காஸ் சிலிண்டரில் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை, விரைவில் அறிமுகம் செய்ய போகிறதாம்..
கேஸ் சிலிண்டர்: எல்பிஜி காஸ் சிலிண்டரில் இயங்கும் அயர்ன்பாக்ஸ செலவு மிகவும் குறைவு என்கிறார்கள்.. அதனால் முதல்கட்டமாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில், 5 கிலோ எல்பிஜி சிலிண்டரில் இயங்கக்கூடிய, அயர்ன்பாக்ஸ்களை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது... இந்த அயர்ன் பாக்ஸ், வெறும் 2 நிமிஷங்களிலேயே சூடாகிவிடுமாம்..
வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவது போலவே, தள்ளுவண்டியில் பாதுகாப்பாக இந்த இஸ்திரியை பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கரியை எரிப்பதால் வெளியேறும் கார்பன் - டை - ஆக்சைடு போன்றவற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பும் ஏற்படாது என்று நம்பிக்கை தருகிறார்கள். விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளதால், இதன் சேவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விலை குறைவு: கடந்த 2018-லேயே இந்த அயர்ன்பாக்ஸ் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், விலை அதிகமாக இருந்தால், பெரிய வரவேற்பு அப்போது கிடைக்கவில்லை. ஆனால், இதை பயன்படுத்தியவர்கள், வழக்கமாக வரும் கரண்ட் பில்லை விட, டபுள் மடங்கு குறைந்த அளவுதான் செலவாகிறதாக சொன்னார்கள்.. ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா மட்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இப்போது விலையும் குறைந்து, மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளதாம். இந்த சிலிண்டர் சலவைப் பெட்டி ஒரு வரப்பிரசாதம்தான். சலவைத் தொழிலாளர்களே.. இனி "வெளுத்துக்கட்டுங்கள்"!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications