எல்பிஜி கேஸ் விலை ரூ. 200 குறைப்பு.. பாரத்தை ஏற்றி விட்டு துரும்பை எடுப்பதா? வைகோ கடும் விமர்சனம்
சென்னை: ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு ஒரு துரும்பை எடுத்து விடுவது போல, கேஸ் விலையை ஏற்றி அதில் இருந்து 200 ரூபாய் குறைத்துள்ளனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு எரிவாயு உருளை விலையில் 400 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, 200 ரூபாய் குறைக்கப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதன்பேரில் இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இந்த ஆண்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு, ஒரு துரும்பை எடுத்து விடுவது போல மத்திய அரசு கேஸ் விலையை குறைத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அசைக்க முடியாது, இந்துத்துவா தத்துவங்கள் இங்கே கால் ஊன முடியாது என்றார்.
அண்ணாமலை நடைபயணங்கள் மேற்கொள்ளலாம், அறிக்கைகள் விடலாம், செய்திகளில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதலாம்; ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் பெரியாரும் அண்ணாவும் இயற்றிய சிந்தனை ஓட்டத்தை யாராலும் அகற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி தான் வெற்றி பெறும். மும்பைக்கு நானும் செல்கிறேன்; எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது.
நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும் தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம். கர்நாடகா அரசு நமக்கு அநீதி செய்கிறது. மத்திய அரசு ஓர வஞ்சனை செய்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசு கர்நாடகா தமிழகத்திற்கு செய்யும் துரோகத்தை தடுப்பதில்லை. ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு ஒரு துரும்பை எடுத்து விடுவது போல, கேஸ் விலையை ஏற்றி அதில் இருந்து 200 ரூபாய் குறைத்துள்ளனர்.
கோடநாடு கொலை வழக்கில் 4 பேர் உயிரிழப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவரட்டும்.கொடநாடு கொலை வழக்கு சம்பவத்தில் குற்ற புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தீர விசாரிக்கட்டும். நீட் இறப்பிற்கு காரணமாய் இருக்கும் நீட் தேர்வினை அகற்றுவதில் திமுக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணியில் திமுக போன்ற வலுவான கட்சிகள் இருப்பதால் இது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் இல்லை. அது பற்றி நான் சிந்திக்கவும் இல்லை . தற்போது பேச்சுவார்த்தை இல்லை; திமுகவுடன் பக்க பலமாக இருப்பேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications