சிலிண்டர் தட்டுப்பாடு.. உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
சென்னை: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் பிரச்சனை நிலவி வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஹோட்டல்கள் மூடப்பட்டும், உணவு வகைகள் குறைக்கப்பட்டும் வருகின்றன.
கமர்ஷியல் சிலிண்டர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்களை புக் செய்யத் தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் சேவை முடங்கியது. [ Petrol Shortage]

இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவி வரும் வதந்தியால் பொதுமக்கள் பலரும் பெட்ரோல் பங்க்குகளில் குவியத் தொடங்கியுள்ளனர். கமர்ஷியல் சிலிண்டர்களின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதால் பேக்கரிகள், டீக்கடைகள், ஹோட்டல்கள் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் தலைமைச் செயலாளார், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
* ஹோட்டல்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி செய்யும் தொழில் கூடங்கள் எரிவாயுவுக்குப் பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மானியமாக வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கமர்ஷியல் சிலிண்டர் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படவுள்ளது
*எரிவாயு (LPG) பயன்படுத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் மின் அடுப்புகள் மின் சூடேற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், 25 சதவிகிதம் / அதிகபட்சமாக 3.75 இலட்சம் ரூபாய் மானியத்துடன் கடன் வழங்கப்படவுள்ளது.
*தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 சதவிகிதம் / 2 இலட்சம் ரூபாய் மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கவும் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவிகிதம் / அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரை மானியத்துடனும் கடன் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையினை பெற்று, எல்பிஜி, சிஎன்ஜி, டீசல், பர்னஸ் ஆயில், விறகு போன்றவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி இயங்கி வருகின்றது. இந்நிறுவனங்கள் எல்பிஜி, சிஎன்ஜி போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணென்ணை, ஆர்டிஎஃப், எச்எஸ்டி, பயோமாஸ் போன்றவற்றை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
*இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணை (CTE/CTO) பெற தேவையில்லை, தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது. மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் கால அவகாசம் வரை இந்த விலக்கு அமலில் இருக்கும்.
* தமிழ்நாடு முழுவதும் 9,300 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு 55 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளும் திறன் உள்ளது. இந்த இடர்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.
* எரிவாயு (LPG) பற்றாக்குறையால் உணவகங்கள் மூடப்படும் வேளையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறி விற்பனை பாதிக்கப்படலாம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகளை தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை இடர்பாடின்றியும், 194 உழவர் சந்தைகளில் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக எல்பிஜி சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில் அரசு உயர் அலுவலர்கள் கொண்ட குழு செயல்படவும், இதேபோன்று மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதம் பொது விநியோக திட்டத்திற்கு கூடுதலாக 3228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications